சத்யஜோதி நிறுவனத்தின் படத்துக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு இசையமைக்கவுள்ளார்
இளையராஜா.
சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லெனின் பாண்டியன்’.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தாலும்,
யார் இசையமைப்பாளர் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படத்தின்
இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவாஜி கணேசனின் பேரன்
தர்ஷன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் கங்கை அமரன், ரோஜா உள்ளிட்ட
பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீடு எப்போது
குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.


More Stories
கிராமத்து படத்தில் நடிக்க வேண்டாம் என நினைத்தேன்! – ரம்யா பாண்டியன் | Ramya Pandiyan | Arulvaan
நாளை கோவாவில் நடக்கும் குஷ்பு மகள் திருமணம்: 25 பேர் மட்டுமே பங்கேற்கிறாங்க, ஏன்னா…
”மகப்பேறு விடுப்பு எடுக்கிறேன்” ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சமந்தா!