April 6, 2026

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆ.லோகிராஜன் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திம்மரசநாயக்க ணூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, கன்னியப்ப பிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, கதிர்நரசிங்காபுரம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.என்.வரதராஜன், மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க இணை செயலாளர் ரவி,தேர்தல் பொறுப்பாளர் ரதிமீனா சேகர்,மாநில ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜெயக்குமார்.அ.ம.ம.மு.க.ரவி, பா.மா.க ,த.மா.க பா.ஜ.க. நிர்வாகிகள் சென்றனர்.



Spread the love