தமிழ்நாடு புதுச்சேரி கேரளம் அசாம் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் தற்போதைய முதலமைச்சர்களின் சொத்து விபரம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி கேரளம் மேற்கு வங்கம் அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தது அதன்படி, கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதியும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந் த நிலையில் தற்போதைய முதல்வர்களின் சொத்துவிவரம் வெளியாகி உள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
முதலிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் தனது பெயரிலும், மனைவி துர்கா ஸ்டாலின் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். தனக்குப் ரூ.3.30 கோடி மற்றும் மனைவிக்கு ரூ.1.32 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. தங்கம், வெள்ளி நகைகள் அவர்களுக்கு இல்லையெனவும், மனைவியிடம் பழைய நகைகள் 720 கிராம் (₹84 லட்சம்) மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்டார். இருவருக்கும் வாகனங்கள் இல்லை, வங்கிக் கடன், வருமான வரி, ஜி.எஸ்.டி., சொத்து வரி நிலுவையில் இல்லை. வருமான வரியாக 2020-25 நாட்களில் ரூ.20.93–60.40 லட்சம் வருமானம் காட்டப்பட்டுள்ளது.
2 வது இடத்தில் ஹிமந்தா பிஸ்வா சர்மா

அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அவரது மனைவியான ரினிகி புயான் சர்மா ஆகியோருக்கு ரூ. 35.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. ஜலுக்பாரி தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் அசையும் சொத்துக்கள் மட்டுமே உள்ளதாகவும், 2021-ல் அதன் மதிப்பு ரூ. 1.72 கோடியாக இருந்ததாகவும், தற்போது 2026-ல் அதன் மதிப்பு ரூ. 2.36 கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ரூ.13.54 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களையும், ரூ.19.25 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களையும், வங்கிகளில் ரூ. 95 லட்சம் கடன்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.அதேசமயம் அவரது மனைவி பெயரில் ரூ. 15.91 கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னிடம் கைவசம் ரூ. 2.28 லட்சம் ரொக்கமும், நான்கு வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ. 68,01,943-ம் இருப்பதாகவும், அதே சமயம் தனது மனைவியிடம் கைவசம் ரூ. 3.16 லட்சம் ரொக்கமும், நான்கு வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ. 74,85,248-ம் இருப்பதாகவும் சர்மா கூறினார்.
3 வது இடத்தில் ரங்கசாமி

புதுச்சேரியில் உள்ள மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி போட்டியிட உள்ளார்.இந் த நிலையில் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் வேட்பாளர் ரங்கசாமியின் சொத்துப் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அவரது கையிருப்புத் தொகை ரூ.33,339, எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.49,632 மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் ரூ. 98,241 இருக்கிறது. அவரிடம் இரண்டு யமஹா பைக்குகள் மற்றும் ஹோண்டா சிட்டி மற்றும் கியா கார்னிவல் ஆகிய இரண்டு கார்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தலா 12 கிராமில் ஒரு செயினும், ஒரு மோதிரம் ரூ.21,25,752 மதிப்பில் உள்ளது. தட்டாஞ்சாவடி பகுதியில் ரூ.8 கோடி மதிப்பில் 20,000 சதுரஅடியில் ஒரு நிலம் உள்ளது. மேலும் ரூ.12 கோடி மதிப்பில் 25,000 மற்றும் 40,000 சதுரஅடியில் இரண்டு நிலங்கள் உள்ளன. மேலும், 2,400 சதுரஅடியில் ரூ.28 லட்சம் மதிப்பில் ஒரு கட்டிடம் உள்ளது. மொத்த மதிப்பு ₹27.78 கோடி ஆகும்.
4 வது இடத்தில் பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அறிவித்துள்ளார். இதில் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இரண்டும் அடங்கும். கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் விஜயன் , வியாழக்கிழமை அன்று இடது ஜனநாயக முன்னணி (LDF) வேட்பாளராக தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் .அவரது மனைவி கமலா தாயிகண்டியில் சுமார் 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அறிவித்துள்ளார். மேலும், அவர் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு ஒன்றில் மேல்முறையீடு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார். .2020-21 மற்றும் 2024-25-க்கு இடையில் முதலமைச்சரின் வருமானம் சுமார் 85% உயர்ந்துள்ளது. மேலும், முதலமைச்சர் தனது கைவசம் ரூ.10,000 ரொக்க இருப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
5 வது இடத்தில் மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி அறிவித்த நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 15.38 லட்சமாக உள்ளது. இதன் மூலம், நாட்டில் பதவியில் இருக்கும் முதலமைச்சர்களிலேயே மிகக் குறைந்த செல்வம் கொண்டவராக அவர் திகழ்கிறார்.இந்தியாவின் 31 முதலமைச்சர்களின் சொத்து ஒப்பீட்டுப் பட்டியலில் மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளார். தற்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி, மம்தா பானர்ஜியின் நிதி விவரங்களில், கையில் உள்ள ரூ. 69,255 ரொக்கமும், தேர்தல் செலவினக் கணக்கில் உள்ள ரூ. 1.5 லட்சம் உட்பட, சுமார் ரூ. 13.5 லட்சம் வங்கி வைப்புத்தொகையும் அடங்கும். மேலும், அவர் 9 கிராம் மதிப்புள்ள, தோராயமாக ரூ. 43,837 மதிப்புள்ள நகைகளையும் வைத்திருக்கிறார்.கடந்த 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், பானர்ஜி அசையும் சொத்துக்களை மட்டுமே அறிவித்திருந்தார்நிலம் அல்லது குடியிருப்பு வீடு போன்ற அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை கூறியிருந் தது குறிப்பிடத்தக்கது.

More Stories
தொகுதி மறுவரையறை விஷயத்தில் சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா நகர்கிறதா? – ஸ்டாலின் காட்டம்
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி
‘வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து 10 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை!’