April 8, 2026

ஹார்மூஸ் நீரிணை திறப்புக்கு ஈரான் சம்மதம்.. இந்திய மக்களுக்கு குட் நியூஸ்..

Strait of Hormuz: உலகின் மிக முக்கிய வர்த்தக வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு, பெட்ரோ, டீசல் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி. அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியோடு, தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் நீரிணையை மூடிவைத்துள்ளது.

  

ஈரானின் இந்த நடவடிக்கையால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுபாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்க்கொண்டன.

டிரம்ப்பின் எச்சரிக்கை

இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் நீரிணையை திறக்கவும், அமெரிக்கா – ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளவும் ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் விதித்திருந்தார். 10 நாட்களுக்குள் நீரிணையை திறக்காவிட்டால் ஒரே இரவில் முழு ஈரானையும் அழிக்க வேண்டிய நிலை ஏற்படும். அது நடக்க கூடாது என்று எண்ணுகிறேன். ஆனால், அதற்கான சாத்தியம் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த காலக்கெடு இன்று அதிகாலை 05.30 மணியோடு நிறைவடைய இருந்த நிலையில், ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்திருத்தார். ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முன்மொழியப்பட்ட 2 வார கால போர் நிறுத்தத்திற்கு தான் ஒப்புக்கொள்வதாக டிரம்ப் கூறியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணையை திறக்க சம்மதம்

ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், போர் நிறுத்தத்திற்கும் ஹார்முஸ் நீரிணையத் திறப்பதற்கும் ஒப்புக்கொள்வதாக ஈரான் தெரிவித்திருந்த நிலையில், இறுதியாக ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதித்துள்ளது. அதேசமயம், ஹார்முஸ் நீரிணையைக் கடக்க ஒரு கப்பலுக்கு இந்திய மதிப்பில் ரூ.18.5 கோடி கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தையே ஆளும் ஒரு சிறிய பகுதி

பழங்காலத்தில் இருந்தே ஹார்முஸ் நீரிணை ஒரு முக்கிய வர்த்தக வழித்தடமாக இருந்து வருகிறது. இந்த நீரிணையின் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு நாடுகளும் இருக்கின்றன. ஹார்முஸ் நீரிணையை தாண்டிதான் பல முக்கிய நாடுகளுக்கும் கப்பல்கள் செல்ல முடியும்.

மேலும், உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் சப்ளையில் 20% ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் நடக்கிறது. அத்துடன், உலகின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி எரிவாயுவில் கால் பங்கு இந்த நீரிணை வழியாக வர்த்தமாகிறது.

கச்சா எண்ணெய் சப்ளை தவிர கெமிக்கல்ஸ், விவசாய உற்பத்தி பொருட்கள், உணவுப் பொருட்கள், எத்தனால், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் இந்த நீரிணை வழியாகவே வர்த்தமாகின்றன. இதன் காரணமாகவே ஹார்முஸ் நீரிணையின் மூடல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஈரானுக்கு எதிராக களமிறங்கும் டிரம்ப்.. அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்

இந்திய மக்களுக்கு நிம்மதி தரும் தகவல்

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான இந்திய மாலுமிகளை ஏற்றிச் செல்லும் 16 இந்தியக் கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ளன. இந்த கப்பல்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுவும் நிரம்பியுள்ளது. தற்போது, நீரிணை முழுமையாக திறக்கப்படுவதால் இந்த கப்பல்களும் விரைவில் இந்தியாவை வந்தடைய உள்ளது. இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்காக நிலவி வந்த தட்டுபாடுகள் நீங்கும், விலைவாசியும் இயல்பை எட்டும்.

Spread the love