திருவண்ணாமலை, ஏப்.9–
திருவண்ணாமலை என்றாலே தி.மு.க. மலை, தி.மு.க.வின் கோட்டை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
எ.வ. வேலு (திருவண்ணாமலை), கு. பிச்சாண்டி (கீழ்பெண்ணாத்தூர்), மு.பொ. கிரி (செங்கம்), ஜோதி (செய்யார்), அம்பேத்குமார் (வந்தவாசி), பெ.சு.தி. சரவணன் (கலசப்பாக்கம்), சரவணன் (போளூர்–தேமுதிக), மகாலட்சுமி கோவர்தனன் (ஆரணி), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), உதயசூரியன் (சங்கராபுரம்), வசந்தவேல் (உளுந்தூர்பேட்டை), கு.மாலதி (கள்ளக்குறிச்சி) ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் உரையாற்றினார்
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
திருவண்ணாமலையையும் தீபத்தையும் பிரிக்க முடியுமா? அதேபோல என்னையும் திருவண்ணாமலையையும் யாராலும் பிரிக்க முடியாது. நினைத்தாலே முக்தி தரும் ஊராக ஆன்மிக அன்பர்களால் போற்றக்கூடிய திருவண்ணாமலைக்கு வந்துள்ளேன். திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வழக்கமாக கிரிவலம் வருகிறார்களோ, இல்லையோ, இந்த ஸ்டாலின் அடிக்கடி திருவண்ணாமலைக்கு வலம் வருகிறேன்.
2021 தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது திருவண்ணாமலைதான். திருவண்ணாமலை என்றாலே தி.மு.க. மலை என்ற அளவுக்கு தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. திருவண்ணாமலையை தனி மாவட்டமாக அறிவித்தவர் கருணாநிதி. தற்போது திருவண்ணாமலையை மாநகராட்சி யாக தரம் உயர்த்தி இருக்கிறோம்.
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஸ்டாலின் முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படும். முடிந்தால் பழனிசாமி தடுத்துப் பார்க்கட்டும்.
திருவள்ளூர் மீது காவி சாயம் பூசினார்கள், அதை எதிர்த்து பழனிசாமி பேசினாரா?, தொடர்ந்து எம்.ஜி.ஆர். மீதும் காவி சாயம் ஊற்றுவதற்கு சங்கி களவர கும்பல் இறங்கிட்டாங்க.
ஹிந்தி, சமஸ்கிருத வளர்ச்சிக்கு பூசணிக்காய் அளவுக்கு நிதி ஒதுக்கிறார்கள். ஆனால், தமிழுக்கு பட்டாணி அளவுக்குகூட ஒதுக்கமாட்டார். இந்த துரோகத்தை எதிர்த்து பழனிசாமி பேசமாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பா.ராணி ஆதரித்து கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தீவிர பிரச்சாரம் .
மரியநாதபுரம், தேவசகாய நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் மானமிகு. I.P. செந்தில் குமார் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.