September 23, 2026

புதுக்கோட்டை 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பு…

 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் இன்று மாலை நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூரில் விராலிமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Spread the love