பழனியில் செங்கோட்டையில் கூறினார்
பழனி ஏப்ரல் 13
ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் கசிந்ததற்கு மத்திய மந்திரி எல் முருகன் தான் காரணம் என்று, பழனியில் தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறினார். பழனியில் தவெக கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தவெக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் பேசியதாவது. திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி, விஜய் தான், நாட்டின் நலனுக்காக அரசியலுக்கு வந்த நடிகர் விஜய் ஒருவர்தான். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக முடியாது. ஜனநாயகம் திரைப்படத்தை இணையதளத்தில் கசியவிட்டு ஜனநாயகத்தை முடக்கியவர் மத்திய மந்திரி எல் முருகன் ஆவார். இந்த தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும். அடக்கு முறையால் எங்கள் தலைவரை ஒன்றும் செய்ய முடியாது. திருப்புமுனையை உருவாக்கி தமிழகத்தில் விஜய் ஆள்வார். சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஏற்றுக் கொள்ளும் தலைவர் விஜய் ஒருவர் தான். தமிழக முழுவதும் விஜய் அலை வீசுகிறது. நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று விஜய் ஆட்சி அமைப்பார். இவ்வாறு அவர் கூறினார். இதில் மூத்த நிர்வாகி மகுடீஸ்வரன், மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா, வேட்பாளர் பிரவீன் குமார், நகர செயலாளர் மீதுன் மனோகரன், ஒன்றிய செயலாளர் மணிகண்ட பிரபு உட்பட ஏராளமானவர் பங்கேற்றனர்

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்