சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை நாளை முதல் ஏப்.20 வரை வழக்கத்தை விட 5 டிகிரி வரை உயரக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னார் வளைக்குடா வரை, விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக, சுமார் 1.5 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை (ஏப்.17) முதல் 22-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உள் தமிழக மாவட்டங்களில் நாளை முதல் 20-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

More Stories
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து R.V நகர் ,முகமதிய புரம்,கிழக்கு ரத வீதி,நாதரஷாதெரு ,மணிகூண்டு கடைவீதி
கள்ளிமந்தயத்தில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாக மாற்ற வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்