உலகில் பல நாடுகள் தங்களது எல்லைகளை பாதுகாக்கவும் விசா விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றனர். செய்து வருகின்றன.ஆனால் அதற்கு மாறாக ஒரு நாடு மட்டும் விசா இல்லாமல் வெளிநாட்டு பயணிகளை தனது நாட்டிற்குள் வர அனுமதிக்கிறது. அந்த நாடு எது தெரியுமா? இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உலகின் பெரும்பாலான நாடுகள் சமீபகாலமாக சுற்றுலா பயணிகளுக்கும், வேலை சாந்து வரும் வெளிநாட்டு மக்களுக்காக கடுமையான விசா கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. மேலும், சட்டவிரோதமாக நாட்டிற்கு வந்தவர்களை வெளியேற்றி வருகிறது. இப்படியான சூழலில், பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய நாடு மட்டும் விசா இல்லாமல் நுழைவு அனுமதி வழங்குகிறது.இதை கேட்டால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா? இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம்

இந்தியர்கள் உட்பட உலகின் எந்த நாட்டிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் முன்கூட்டிய விசா இல்லாமல் அங்கு செல்லலாம். பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதுமானது. 2026 ஆம் ஆண்டில் இந்த நாடு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறி வருகிறது.இந்த நாடு மைக்ரோனேசியாவின் கூட்டாட்சி மாநிலங்களை அடிப்படையாக கொண்டதாகும். இங்கு 1980 முதல் தளர்வான குடியேற்றக் கொள்கை நடைமுறையில் உள்ளது.
இந்த நாட்டுக்கு விசா தேவையே இல்லையாம்

அந்தக் கொள்கையின் படி எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தங்கலாம். விமான நிலையத்தில் இறங்கியவுடன் நுழைவு அனுமதி கிடைப்பதால் நீண்ட விசா நடைமுறைகள் தேவையில்லை.இந்தியர்களுக்கும் இதே விதி பொருந்தும்.செல்லுபடியாகும் பாஸ்போர்ட் திரும்பும் விமானச்சீட்டு மற்றும் பயணச் செலவுக்கான போதுமான பணம் இருந்தால் போதும்.
இந்த நாட்டில் எவ்வளவு தங்க முடியும்?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் சலுகைகள் உள்ளன. அமெரிக்க குடிமக்கள் காலவரையின்றி தங்கலாம். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 90 நாட்கள் வரை தங்க முடியும்.மைக்ரோனேசியா என்பது நான்கு முக்கிய தீவுகளால் ஆன நாடு. அதன் இயற்கை அழகு மற்றும் அமைதியான சூழல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
2026ல் டிரெண்டாகும் விசா இல்லா சுற்றுலா நாடு

இங்கு தெளிவான கடல் நீரில் ஸ்நோர்கெல்லிங் ஸ்கூபா டைவிங் போன்ற அனுபவங்கள் மிகவும் பிரபலமானவை.ஜெல்லிமீன் ஏரி போன்ற தனித்துவமான இடங்களும் உள்ளன.பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலா மற்றும் மீன்பிடியை சார்ந்துள்ளது. ஆனால் காலநிலை மாற்றம் இந்த தீவுகளுக்கு பெரிய சவாலாக உள்ளது. அதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கூட்டம் குறைவாகவும் இயற்கை அழகுடன் கூடிய இந்த நாடு, அமைதியான பயண அனுபவத்தை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாகும்.

More Stories
உக்ரைன் குடியிருப்பு பகுதிகள் மீது 700 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு
“ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானால் நான் பாகிஸ்தான் செல்வேன்” – ட்ரம்ப்
“அமெரிக்கா-ஈரான் இடையே விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை”: பாக். அமைச்சர் நம்பிக்கை