புதுடெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் மக்களவையில் நேற்று தோற்கடிக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார்.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டு அதில், அரசியல் சாசன திருத்த (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் சாசன திருத்த மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் நிலையில் இந்த மசோதா மக்களவையில் நேற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
மொத்தம் 528 எம்.பி.க்கள் வாக்களித்தனர். மசோதா நிறைவேற மக்களவையில் 352 எம்.பி.க்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், 298 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். 230 பேர் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்தது. அரசியல் சாசன திருத்த மசோதா தோல்வி அடைந்ததை அடுத்து மற்ற 2 மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More Stories
வேளச்சேரி தொகுதியில் வீதி வீதியாக காங். வேட்பாளர் அசன் மவுலானா தீவிர பிரச்சாரம்
தேனி மாவட்டத்தின் கும்பக்கரை அருவி மூடல்: போதிய நீர்வரத்து இல்லாததால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!
திமுக ஆட்சியில்தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு: இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன் பேச்சு.