விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி இன்று (திங்கள் கிழமை) காலை உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியல் பட்டாசு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களில் 19 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்டனர். 4 பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில் இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சேர்வைக்காரன் பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), திருத்தங்கலைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56) ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது