சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.23-ம் தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தமிழக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் செ.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி (வியாழன்) நடைபெற உள்ளது. இதையொட்டி, மாற்று முறை ஆவணங்கள் சட்டத்தின்படி அன்றைய தினம் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி, தமிழகம் முழு
வதும் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் வாக்களிக்க வசதியாக தேர்தல் நாளில் அவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்குவது கட்டாயம் ஆகும்.
எனவே, அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களும் வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ம் தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் செய்ய வசதியாக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சார்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அலுவலர்களை பொதுமக்கள், தொழிலாளர்கள் தொடர்பு கொள்ளலாம். அலுவலர்களின் பெயர், தொடர்பு எண் விவரம்: தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை இணை இயக்குநர்கள் எம்.வி.கார்த்திகேயன் (திருவொற்றியூர்) – 9444221011, எஸ்.கமலக்கண்ணன் (சென்னை) – 9884675712, நிர்வாக அலுவலர் எஸ்.சூரியா (சென்னை) – 9884470526, துணை இயக்குநர் த.மணிசங்கர் (காஞ்சிபுரம்) – 9940468249. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்