இன்று காலை வாக்களிக்க வந்தபோது அங்கு கூடியிருந்த ரசிகர்களை தன் செல்போனில் வீடியோ எடுத்தபடியே வந்தார் அஜித் குமார். இதுவரை இப்படி நடந்தது இல்லை என்பதால் அஜித் கையில் செல்லை பார்த்ததும் அனைவருக்கும் ஒரே ஆச்சரியம் தான்.
முக்கிய அம்சங்கள்:
- முதல் முறையாக வீடியோ எடுத்த அஜித்
- அஜித் ஏங்க வீடியோ எடுத்தார்?
- தேர்தல் நாளில் டிரெண்டான அஜித்
அஜித் வாக்கு: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலையில் இருந்து சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் நபர் அஜித் குமார் தான். அதற்கு என்னென்ன காரணம் இருக்கிறது என பார்க்கலாம்.
இன்று தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் வாக்கிற்கு சொந்தக்காரர் வேறு யாரும் அல்ல அஜித் தான். 6.45 மணிக்கு திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்றார். வெள்ளை நிற கோட் சூட் அணிந்து கூலிங் கிளாஸ் போட்டு வந்த மனிதர், சரியாக 6.54 மணிக்கு தன் வாக்கை பதிவு செய்தார். அது தான் இன்று பதிவான முதல் வாக்கு ஆகும்.
அஜித் குமார் கையில் செல்போனை பார்ப்பதே அறிது. அதிலும் ஓட்டு போட வந்தார் என்றால் செல்போனுடன் அவரை இதுவரை பார்த்ததே கிடையாது. இந்நிலையில் இன்றோ தன் செல்போனில் ரசிகர்களை வீடியோ எடுத்துக் கொண்டே வாக்குச்சாவடிக்குள் சென்றார். அஜித் குமாரை அவரின் ரசிகர்கள் வீடியோ எடுக்க பதிலுக்கு அவரும் வீடியோ எடுக்க, இது என்ன தல புதுசா இருக்கே என்பதே பலருக்கும் எழுந்த கேள்வி ஆகும்.
அப்படி இருக்கும்போது மாற்றம் வரப் போகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதாகவும் அதற்கு No Need என அஜித் குமார் பதில் அளித்ததாகவும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேச்சு கிளம்பியது. ஒரு பிரபல ஊடகத்தின் லோகோவுடன் அந்த தகவல் பரவியதால் உண்மை போன்று என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் அஜித் குமார் அப்படி எதுவும் சொல்லவில்லை என்று அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
எந்த படத்தில் நடித்தபோது ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் காதல் வந்தது தெரியுமா?அஜித் சொல்லாத விஷயத்தை அவர் சொன்னதாக முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் வேறு கேட்டார்கள். அய்யோ சி.எம். சார், மாற்றம் தேவையில்லை என்று அஜித் குமார் ஐயா சொல்லவே இல்லையாம் என்று தற்போது மக்கள் கூறி வருகிறார்கள். இதற்கிடையே கத்தரி வெயில் கொளுத்தும்போது இப்படி ஜம்முனு கோட் சூட் போட்டு வந்திருக்கிறீர்களே அஜித். உங்களுக்கு மட்டும் கோடை வெயில் தாக்கம் இல்லையா என்று சினிமா ரசிகர்கள் கேட்கிறார்கள்.
கெத்து அஜித்: ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்து தலைப்புச் செய்தியானதுடன், சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார் அஜித் குமார். இதற்கிடையே அஜித் லுக் செமயாக இருக்கிறது. பேசாமல் இதையே ஏ.கே. 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடுங்க ஆதிக் ரவிச்சந்திரன் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அஜித் செம ஸ்டைலாக வந்து அனைவரையும் இம்பிரஸ் செய்துவிட்டார். பெல்ஜியம் ரேஸில் வெற்றி பெற்ற சந்தோஷம் அவரின் முகத்தில் தெரிந்தது. இதற்கிடையே வாக்குச்சாவடியில் முந்தியடித்த ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி ஒரு பார்வை பார்த்து அவர் கட்டுப்படுத்தியதை பார்த்தவர்கள் இது தான்யா தலைமை என்கிறார்கள்.

More Stories
தேர்தல் ஆணைய நெறிமுறை அறிந்து விஜய் கோரிக்கை வைத்திருக்கலாம்: அமைச்சர் கோவி.செழியன்
பிற்பகல் 1 மணி நிலவரம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 56.81% வாக்குப் பதிவு
தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடக்கும் வாக்குபதிவு.. வாக்களர்களை வரவேற்கும் ரோபோ TINA – அசத்தல்!