விஜய் தனது பரப்புரையில் குழந்தைகளிடம் பெற்றோர்களை தவெகவிற்கு வாக்களிக்க செய்யுங்கள் என பேசியிருந்தார். இதன் காரணமாக கோவையில் காவல் ஆணையரிடம் விசிக கட்சியை சேர்ந்த சிலர் புகார் கொடுத்துள்ளனர்
முக்கிய அம்சங்கள்:
குழந்தைகளிடம் வாக்கு கேட்ட விஜய்
கோவையில் புகார்

சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. தேர்தலின் காரணமாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். அதன் பிறகு வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஓய்வெடுக்க வெளியூர்களுக்கு கிளம்பி வருகின்றனர். இன்று தான் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தன் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.
அதைப்போல மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் ஓய்வெடுக்க கிளம்பி வருகின்றனர். தவெக தலைவர் விஜய்யும் ஓய்வெடுக்க வெளிநாடு செல்ல இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதற்கிடையில் அவர் மீது அடுத்தடுத்து புகார் கொடுக்கப்பட்டு வருகின்றது. நேற்றைய தினம் விஜய் தனது பரப்புரையில் புறா மீது தவெக வண்ணம் பூசியதற்காக பீட்டா அமைப்பு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தனர்.
புறாவுக்கு தவெக வண்ணம்..விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா கடிதம்
இன்று கோவை காவல் ஆணையரிடம் விஜய்மீது ஒருவர் புகார் கொடுத்திருக்கின்றார். அதாவது விஜய் தனது பரப்புரையின் போது, குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் சாக்லெட்டிற்கு அடம் பிடிப்பதை போல தவெகவிற்கு வாக்களிக்க வேண்டும் என அடம் பிடிக்க வேண்டும் என கூறியிருந்தார். பெற்றோர்களிடம் அடம் பிடித்து தவெகவிற்கு வாக்களிக்க செய்யுங்கள் என விஜய் கூறியிருந்தார்.
இதன் காரணமாக தான் தற்போது விஜய் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த விசிகநிர்வாகி ஒருவர் விஜய் மீது புகார் கொடுத்திருக்கின்றார். அந்த புகாரில், விஜய் கூறியதால் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் தவெகவிற்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தி வருகின்றனர். இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். விஜய்யின் இந்த கருத்தினால் குழந்தைகளிடம் உளவியல் பாதிவு ஏற்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிய வேண்டும் என அந்த புகாரில் உள்ளது.
விஜய் குழந்தைகளிடம் அடம் பிடித்து பெற்றோர்களை வாக்களிக்க வையுங்கள் என சொன்னதால் ஏராளமான குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் சாப்பிடாமல் அடம் பிடித்து விஜய்க்கு வாக்களிக்குமாறு சொல்லியதால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை காவல் ஆணையரிடம் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விசிக கட்சியை சேர்ந்தவர்கள் இந்த மனுவை கொடுத்திருப்பதாக தெரிகின்றது.
இப்படி விஜய் பரப்புரை செய்யும்போது தான் பல சர்ச்சைகள் வந்துகொண்டு இருந்ததே என பார்த்தால் தற்போது தேர்தல் முடிந்தும் கூட விஜய் குறித்தான சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. நேற்று பீட்டா அமைப்பினர் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று விஜய் குழந்தைகளிடம் வாக்கு கேட்டதற்காக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இந்நிலையில் விஜய் பரப்புரையில் மட்டுமல்லாமல் நேற்று தனது அறிக்கையிலும் கூட இதுகுறித்து பேசியிருந்தார். தமிழ்நாட்டில் 85 % வாக்குப்பதிவு நடந்ததாக தமிழ்நாடு மக்களுக்கு நன்றியினை தெரிவித்தார் விஜய். அப்போது அந்த அறிக்கையில் ,நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா மற்றும் நண்பீஸ்க்கு உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் நன்றிகள் என தெரிவித்தார்.
விஜய் பரப்புரையில் குழந்தைகளிடம் பேசியது அவர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை கண்டிப்பாக உண்டாக்கி இருப்பதாகவே தெரிகின்றது. தேர்தலில் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய் பேசியது குறித்து பலர் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். தற்போது இதன் காரணமாக புகார் கொடுக்கப்பட்டு இருப்பதால் விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ? இல்லையா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More Stories
உக்ரைன் போரில் 10 இந்தியர்கள் உயிரிழப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாகநிா்ணயம்! தமிழ்நாடு அரசு
ஓய்வூதியதாரர்களுக்கு குட்நியூஸ்..! 2026-04-25