April 28, 2026

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,040 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.28) சென்னையில் பவுனுக்கு ரூ.1,040 எனக் குறைந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 எனக் குறைந்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 20 முதல் 24-ம் தேதி வரையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,080 என விலை குறைந்தது. கடந்த சனிக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.800, திங்கட்கிழமை அன்று பவுனுக்கு ரூ.240 என தங்கம் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.28) கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100-க்கும், பவுனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு பவுன் ரூ.1,12,800-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.142 என விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.15,382-க்கும், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.110 என விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.11,760-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது.

Spread the love