ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி
முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனில் 400 ரன்களை விரைந்து எட்டி புதிய சாதனை படைத்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டீன் ஏஜ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இப்போது ஆரஞ்சு தொப்பியும் அவர் வசமாகி உள்ளது.
டி20 கிரிக்கெட்டின் பேட்டிங் பாணியை தனது அதிரடி ஆட்டம் மூலம் மாற்றி அமைத்து வருகிறார் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி. தான் விளையாடும் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் புது புது சாதனைகளை அவர் படைத்து வருகிறார். சர்வதேச அளவில் இளையோர் கிரிக்கெட்டிலும் இதையே தான் அவர் செய்து வருகிறார். இப்போது அதை ஐபிஎல் பக்கம் மடைமாற்றி உள்ளார்.
நேற்று (ஏப்.28) நியூ சண்டிகரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 பந்துகளில் 43 ரன்களை அவர் விளாசி இருந்தார். இதன் மூலம் தனது அணி 223 ரன்கள் என்ற இலக்கை எட்ட உதவினார். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வெல்ல, அது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நடப்பு சீசனில் முதல் தோல்வியாக அமைந்தது.
இந்த சீசனில் 9 இன்னிங்ஸில் விளையாடி, 168 பந்துகளில் 400 ரன்களை வைபவ் சூர்யவன்ஷி எடுத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே சீசனில் குறைந்த பந்துகளில் விரைவாக 400 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதன் மூலம் இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் முதலிடம் பிடித்து, ஆரஞ்சு தொப்பியை தன்வசமாக்கி உள்ளார்.
இதற்கு முன்பு இதே 400 ரன்களை ரஸல் – 188 பந்துகள்: 2019 சீசன், அபிஷேக் சர்மா – 195 பந்துகள்: 2024 சீசன், நிக்கோலஸ் பூரன் – 197 பந்துகள்: 2025 சீசன், மேக்ஸ்வெல் – 200 பந்துகள், 2014 சீசனிலும் எடுத்துள்ளனர்.
நடப்பு சீசனில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்…
>வைபவ் சூர்யவன்ஷி – 400 ரன்கள்
>அபிஷேக் சர்மா – 380 ரன்கள்
>கே.எல்.ராகுல் – 358 ரன்கள்
>விராட் கோலி – 351 ரன்கள்
>கிளாசன் – 349 ரன்கள்

More Stories
ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான 5 அணிகள்: முதலிடத்தில் ஆர்சிபி
“பொறுமையை சோதிக்கிறது… புனிதம் காக்கப்பட வேண்டும்” – ஐபிஎல் குறித்து கவாஸ்கர்
வெற்றிப் பாதைக்கு திரும்புமா டெல்லி? – பெங்களூரு அணியுடன் இன்று மோதல்