திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா தெக்குப்பட்டு ஊராட்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மாற்று சமூகத்தைச் சேர்ந்த சரளா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளார். இவர்களுக்கு சொந்தமான நிலத்தின் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் நிலத்திற்கு அருகில் சுதா மற்றும் அவரது தாய் பாப்பாத்தி மற்றும் மகன் சதீஷ், விக்னேஷ் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இருவருக்கும் அடிக்கடி நிலத்தின் வழியாக செல்லும் போது பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கடந்த 27/4/2026 அன்று வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் இரு தரப்பினர் கட்டையால் தாக்கியுள்ளனர் இதில் காயம் அடைந்த சாலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி இருவரும் காயங்கள் ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆக இருவரையும் தாக்கிய சதீஷ் மற்றும் விக்னேஷ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவரது தாய் சுதா மற்றும் பாப்பாத்தி மீது வழக்கு பதிவு செய்து அம்பலூர் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக சாலா மற்றும் கிருஷ்ணன் மூர்த்தி மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து 28/04/2026 அன்று இரவு கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். எதிர் தரப்பினர் மற்றும் பாப்பாத்தி வழக்கு பதிவு செய்து உள்ளனர். ஆனால் சாலா மற்றும் கிருஷ்ணமூர்த்தி மீது கடுமையாக தாக்கிய சதீஷ் மற்றும் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி 29/04/2026 அன்று பிற்பகல் 12 மணியளவில் கிருஷ்ணமூர்த்தி மகன், ஹரி பிரசாத், வாசு மற்றும் மகள் ஆகிய மூவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் எனது தாய் தந்தை ஆகிய இருவர் மீதும் கடுமையாக தாக்கிய சதீஷ் மற்றும் விக்னேஷ் சுதா மற்றும் பாப்பாத்தி ஆகிய நால்வர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். மேலும் எனது தாய் தந்தை ஆகிய இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தற்போது எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் எனது தாய் தந்தை விடுதலை செய்ய வேண்டும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம்

More Stories
கள்ளழகருக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லி. ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம் அனுப்பிவைப்பு
ஷீரடி சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்.கலைச்செல்வி, உதவி பொறியாளர்.கார்த்திக், ஆகியோர் அம்பேத்கர் நகர் கால்வாய் பகுதிகளை உறிஞ்சு குழாய் வழியாகச் செல்லும் கழிவுநீர்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்