சென்னை: தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பிற்பகல் நிலவரப்படி தவெக: 109, அதிமுக: 61, திமுக: 57 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
இந்நிலையில், 22 சுற்றுகளில் 8-வது சுற்றின்படி, பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 19,100-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் 45,917 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் திமுகவின் ஆர்.டி.சேகர் மற்றும் மூன்றாவது இடத்தில் பாமகவின் திலக பாமா இருக்கிறார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் 8-வது சுற்றின்படி, விஜய் 12,000-க்கும் மேற்பட்ட வாக்குதிகள் வித்தியாசத்தில் 32,792 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். மேலும், திமுகவின் இனிகோ இருதய ராஜ் 20,777 வாக்குகளையும், மூன்றாவது இடத்தில் அதிமுகவின் ராஜசேகரன் 8,618 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More Stories
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க மத்திய அரசு இலக்கு
கடந்த நிதி ஆண்டில் பெல் நிறுவனம் ரூ.32,350 கோடி வருவாய் ஈட்டி சாதனை: செயல் இயக்குநர் தகவல்
சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்