சென்னை: தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெறவில்லை. இதையடுத்து, ஆட்சியமைக்க ஆளுநருக்கு தவெக கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தவெக எம்எல்ஏக்களை விஜய் சந்தித்தார்.
அப்போது, ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஜய் முதல்வராக ஆதரவு அளித்து உறுதிமொழி பத்திரத்தில் எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இதற்கிடையில், கூட்டணிக்காக சில கட்சிகளுடன் விஜய் தரப்பில் ஆதரவு கோரப்பட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

More Stories
மதுரையின் 4 தொகுதிகளில் தவெக சார்பில் வெற்றி பெற்ற ‘திடீர்’ வேட்பாளர்கள்!
புதுக்கோட்டை
புதுக்கோட்டை