May 6, 2026

அசாம், மேற்கு வங்கத்தில் கிங் மேக்கராக விரும்பிய முஸ்லிம் தலைவர்களுக்கு பின்னடைவு

பத்​ருதீன் அஜ்மல் | ஹுமாயூன் | ஒவைசி |

புதுடெல்லி: அசாம் மற்​றும் மேற்கு வங்​கத்​தில் முஸ்​லிம்​கள் 30% முதல் 35% வரை உள்​ளனர். கணிச​மான தொகு​தி​களின் வெற்றியை இவர்​கள் தீர்​மானிக்​கிறார்​கள். எனினும் முஸ்​லிம் அரசி​யல் செய்​யும் கட்​சிகளை இம்​மாநிலங்​களில் உள்ள முஸ்லிம்கள் இம்​முறை முழு​மை​யாக நம்​ப​வில்​லை.

இதன் விளை​வாக, அசாமில் ஏஐயுடிஎப் தலை​வர் பத்​ருதீன் அஜ்மல் படு​தோல்வி அடைந்​தார். கடந்த தேர்​தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற இவருக்கு இம்​முறை 2 தொகுதிகளில் மட்​டுமே வெற்றி கிடைத்​தது. அசாமில் தனித்து போட்​டி​யிட்ட காங்​கிரஸ், 20 முஸ்​லிம்​களை வேட்பாளர்களாக்கியது. இவர்​களில் 18 பேர் வெற்றி பெற்​றனர். முஸ்​லிம் அல்​லாத 79 வேட்​பாளர்​களில் ஒரு​வர் மட்​டுமே வெற்றி பெற்​றுள்​ளார்.

மேற்கு வங்​கத்​தில் முஸ்​லிம்​கள் சுமார் 30% உள்​ளனர். இங்கு 100-க்கும் மேற்​பட்ட தொகு​தி​களில் முஸ்​லிம்கள் பங்கு அதிகம். இங்குள்ள முர்​ஷி​தா​பாத்​தில் பாபர் பெயரில் மசூதி கட்​டு​வ​தாக அறி​வித்தவர் ஹுமாயூன் கபீர். இதனால், டிஎம்​சியில்இருந்து நீக்கப்​பட்ட இவர் புதிய கட்சி தொடங்​கி​னார். ஏஐஎம்​ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி​யுடன் கூட்​டணி வைத்து தேர்​தலில் போட்​டி​யிட்​டார்.

எனினும் ஹுமாயூன் பாஜக​வுடன் ரூ.1,000 கோடி பேரம் பேசுவது​போல் ஒரு காட்​சிப் பதிவு வெளி​யானதை தொடர்ந்து இவருடனான கூட்​ட​ணியை ஒவைசி ரத்து செய்து தனித்​துப் போட்டி​யிட்​டார். இந்​நிலை​யில் ஹுமாயூன் தான் போட்​டி​யிட்ட இரு தொகு​தி​களைத் தவிர, மாநிலத்​தின் பிற பகு​தி​களில் தோல்வி அடைந்​துள்​ளார். ஒவைசி​யின் கட்​சி​யும் ஒரு தொகு​தி​யில் கூட வெற்​றி​பெற​வில்​லை.

ஹுமாயூன், ஒவைசி ஆகிய இரு​வரும் ஆளும் திரிண​மூல் காங்கிரஸின் வாக்​கு​களைப் பிரித்​துள்​ளனர். மற்​றொரு முஸ்​லிம் தலைவ​ரான பீர் ஜாதா அப்​பாஸ் சித்​திக்​கீ​யும் முஸ்​லிம் வாக்குகளைப் பிரித்​துள்​ளார்.

இந்​த​முறை டிஎம்​சி​யுடன் இடது ​சாரி மற்​றும் காங்​கிரஸுக்​கும் முஸ்​லிம்​கள் வாக்​கு​களைப் பிரித்​தளித்து விட்​டனர். காங்கிரஸுக்கு கிடைத்த 2 தொகு​தி​களில் வென்ற இரு​வருமே முஸ்​லிம்​கள்.

இதன் காரண​மாக, முஸ்​லிம் அரசி​யலை கடுமை​யாக எதிர்த்த பாஜக​வுக்கு அசாமில் தொடர் வெற்​றி​யும், மேற்கு வங்​கத்​தில் முதல்​முறை வெற்​றி​யும் கிடைத்​துள்​ளது. அசாமில் பத்​ருத்​தீன் அஜ்மலும், மேற்கு வங்​கத்​தில் ஒவைசி, ஹுமாயூன் உள்​ளிட்ட முஸ்​லிம் தலை​வர்​களின்​ அரசி​யல்​ செல்​வாக்​கை பாஜக நீர்த்​துப்​ போகச்​ செய்​துள்​ளது.

Spread the love