May 8, 2026

குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக புகார் கூறிய பகவந்த் மானுக்கு பாஜக அவதூறு நோட்டீஸ்

புதுடெல்லி: பஞ்​சாப் மாநிலம் அமிர்​தசரஸ் மற்​றும் ஜலந்​தர் நகரங்​களில் கடந்த 5-ம் தேதி இரவு அடுத்​தடுத்து இரட்டை குண்​டு​வெடிப்​புச் சம்​பவம் நடந்தது.

பஞ்​சாப் சட்​டப்​பேர​வைக்கு அடுத்த ஆண்டு தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில், பாஜக திட்​ட​மிட்டு கலவரங்​களை​யும் குண்​டு ​வெடிப்​பு​களை​யும் நிகழ்த்​து​வ​தாக முதல்​வர் பகவந்த் மான் பகிரங்​க​மாகக் குற்​றம்சாட்​டி​னார்.

இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் தருண் சக், முதல்​வர் பகவந்த் மானுக்கு அனுப்​பி​யுள்ள நோட்​டீஸில், “குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் பாஜக​வுக்கு தொடர்பு இருக்​கிறது என கூறிய கருத்​துகளுக்கு முதல்​வர் பகவந்த் மான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்​டும்.

அத்​துடன் இந்​தக் கருத்தை உடனடி​யாகத் திரும்​பப் பெற வேண்டும். அடுத்த 7 நாட்​களுக்​குள் மன்​னிப்பு கேட்​கா​விட்​டால், அவர் மீது குற்​ற​வியல் அவதூறு வழக்கு மற்​றும் இழப்​பீடு கோரி உரிமை​யியல் வழக்கு தொடரப்​படும்” என கூறப்​பட்​டுள்​ளது.

காவல் துறை மற்​றும் தடய​வியல் துறை​யினர் குண்​டு​வெடிப்பு குறித்து தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதற்கிடையில் ஆளும் ஆம் ஆத்மி மற்​றும் பாஜக இடையே அரசியல் மோதல் உச்​சக் கட்​டத்​தை எட்​டி​யுள்​ளது.

Spread the love