May 11, 2026

தமிழகம்

9 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தி: தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய்​யின் பதவி​யேற்பு விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக சென்னை வந்த காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு தமிழக காங்​கிரஸ் தலை​மையக​மான சத்​தி​யமூர்த்தி பவனுக்கு வருகை தந்​தது கட்​சி​யினரிடையே பெரும் எழுச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

நேற்று காலை டெல்​லியி​லிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்​தி, நேரு உள்​ விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்ற ஜோசப் விஜய் முதல்​வ​ராக பதவி​யேற்​கும் விழா​வில் கலந்து கொண்​டார்.

அங்​கிருந்து நேராக சத்​தி​யமூர்த்தி பவன் சென்​றார். திரண்​டிருந்த ஆயிரக்​கணக்​கான தொண்​டர்​கள் கைத்தட்டி அவருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

அலு​வலக வளாகத்​தில் உள்ள காம​ராஜரின் திரு​வுரு​வப் படத்​துக்கு ராகுல் காந்தி மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். கட்சிக்கு பலம் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் முக்​கிய நிர்​வாகி​களு​டன் ராகுல் காந்தி ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது அவர் பேசுகை​யில், “தமிழகத்​தில் காங்​கிரஸ் கட்​சியை அடிமட்​டம் வரை பலப்​படுத்​தத் தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் முன்​னெடுக்க வேண்​டும். அதற்கு அகில இந்​திய காங்​கிரஸ் தலைமை முழு ஒத்​துழைப்பை வழங்​கும்” எனத் தெரி​வித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

முன்​ன​தாக, கடந்த 2017 ஜூன் மாதம் இந்​திரா காந்தி நினைவு நூல​கத்​தைத் திறந்து வைக்க ராகுல் காந்தி சத்​தி​யமூர்த்தி பவன் வந்​திருந்​தார்.

அதன்​பின் பலமுறை தமிழகம் வந்​திருந்​தா​லும், சுமார் 8 ஆண்​டு​கள் 11 மாதங்​களுக்​குப் பிறகு நேற்​று​தான் அவர் மீண்​டும் கட்​சித் தலை​மையகத்​துக்கு வருகை தந்​துள்​ளார்.

இதனால் தொண்​டர்​கள் உற்​சாகத்​தின் உச்​சத்​தில் காணப்​பட்​டனர். பயணத்தை முடித்​துக்​கொண்டு மதி​யம் 1 மணி​யள​வில் அவர் டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். அவரை செல்​வப்​பெருந்​தகை மற்​றும் மேலிடப் பொறுப்​பாளர்​கள் வழி அனுப்பி வைத்​தனர்

Spread the love