மிர்பூர்: வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 413 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 46 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அசான் அவைஸ் 85, அப்துல்லா பாஸல் 37 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 100.3 ஓவர்களில் 386 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சதம் அடித்த அசான் அவைஸ் 165 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்துல்லா பாஸல் 60, கேப்டன் ஷான் மசூத் 9, சவுத் ஷகீல் 0, சல்மான் ஆகா 58, முகமது ரிஸ்வான் 59, நோமன் அலி 2, ஷாகின் ஷா அப்ரிடி 13, ஹசன் அலி 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். தஸ்கின் அகமது, தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 27 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்தது. மஹ்முதுல் ஹசன் ராய் 2 ரன்களும், ஷத்மான் இஸ்லாம் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள வங்கதேச அணி 4-வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்து விளையாடுகிறது.

More Stories
3-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் நேரடித் தகுதி வாய்ப்பை இழந்த மேற்கு இந்தியத் தீவுகள்
“51 வருட காத்திருப்பு மிக நீண்டது” – இந்திய அணி பட்டம் வெல்ல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல் | Hockey WC
12 அணிகள் பங்கேற்கும் ‘தமிழ் ஹாக்கி லீக்’ நாளை தொடக்கம்