May 12, 2026

நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? – ராஜஸ்தான், கேரளாவில் போலீஸார் தீவிர விசாரணை

ஜெய்ப்பூர்: நீட் நுழைவுத் தேர்வு வினாத்​தாள் கசிந்​த​தாக புகார்கள் எழுந்​துள்​ளன. இதுதொடர்​பாக ராஜஸ்​தான், கேரளாவில் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்​றது. நாடு முழு​வதும் 22.80 லட்​சம் மாணவ, மாண​வியர் இந்த தேர்வை எழு​தினர். இந்த சூழலில் ராஜஸ்​தானின் சிகார் நகரில் நீட் வினாத்​தாள் கசிந்​த​தாக புகார்கள் எழுந்​துள்​ளன. இதன்​பேரில் ராஜஸ்​தான் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி சிகார், ஜுன்​ஜுனு மற்​றும் உத்தராகண்ட் தலைநகர் டேராடூனை சேர்ந்த 13 பேரை கைது செய்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக ராஜஸ்​தான் போலீஸ் வட்​டாரங்​கள் கூறியதாவது: நீட் நுழைவுத் தேர்​வுக்கு முன்​பாக ராஜஸ்​தானின் சிகார் பகு​தி​யில் சமூக வலை​தளங்​கள் வாயி​லாக கையால் எழுதப்​பட்ட மாதிரி வினாத்​தாள் வெளி​யாகி உள்​ளது. இந்த வினாத்​தாளில் இடம்​பெற்​றிருந்த 135 கேள்வி​கள், நீட் வினாத்தாளுடன் ஒத்​துப் போகின்​றன. அதாவது உயி​ரியல், தாவரவியல் வேதி​யியல் பாடங்களின் தலா 45 கேள்வி​களும் நீட்வினாத்​தாளில் அப்​படியே இடம்​பெற்று உள்​ளன.

மாதிரி வினாத்​தாள்​கள் ரூ.2 லட்​சம் முதல் ரூ.5 லட்​சம் வரை சமூக வலை​தளங்​கள் வாயி​லாக விற்​பனை செய்​யப்​பட்​ட​தாகக் கூறப்படு​கிறது. இதுதொடர்​பாக தீவிர விசா​ரணை நடத்தி வருகிறோம். ராஜஸ்​தானின் சிகார் பகு​தியை சேர்ந்த ஒரு மாணவர், கேரளா​வில் உள்ள கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் படித்து வருகிறார். அந்த மாணவரே, சிகார் பகு​தி​யில் உள்ள நீட் பயிற்சி மையத்​துக்கு மாதிரி வினாத்​தாளை அனுப்பி வைத்​த​தாகக் கூறப்படு​கிறது.

தேசிய தேர்வு முகமை விளக்​கம்

இதுதொடர்​பாக ராஜஸ்​தானின் சிறப்​புப் படை கேரளா​வுக்கு விரைந்​துள்​ளது. கேரளா​விலும் நீட் வினாத்​தாள் கசிந்​திருக்​கக்​கூடும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இதுதொடர்​பாக கேரள போலீ​ஸாருடன் இணைந்து விசா​ரணை நடத்தி வருகிறோம். இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இந்த விவ​காரம் குறித்து நீட் நுழைவுத் தேர்வை நடத்​திய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது:

மே 3-ம் தேதி நடத்​தப்​பட்ட நீட் நுழைவுத் தேர்​வின்​போது பாதுகாப்பு நடை​முறை​கள் கண்​டிப்​புடன் பின்​பற்​றப்​பட்​டன. ஜிபிஎஸ் கருவி பொருத்​தப்​பட்ட சிறப்பு வாக​னங்​களில் வினாத்தாள்​கள் தேர்வு மையங்​களுக்கு அனுப்​பப்​பட்​டன. செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​துடன்​கூடிய சிசிடிவி கேமராக்​கள் மூலம் தேர்வு மையங்​கள் கண்​காணிக்​கப்​பட்​டன.

மாணவ, மாண​வியரின் பயோமெட்​ரிக் தகவல்​கள் முழு​மை​யாக சரி​பார்க்​கப்​பட்​டன. தேர்வு மையங்​களில் 5ஜி ஜாமர்​கள் பயன்படுத்​தப்​பட்​டன. கடந்த மே 7-ம் தேதி நீட் வினாத்​தாள் விவ​காரத்​தில் முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தாக தகவல்​கள் வெளியாகின. இதுதொடர்​பாக போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வருகின்றனர்.

போலீ​ஸார் அளிக்​கும் தகவல்​களின் அடிப்​படை​யில் மத்​திய கல்வித் துறை​யுடன் ஆலோ​சித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நேர்​மை​யான முறை​யில் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) உறு​திபூண்டு இருக்​கிறது. போலீ​ஸாரின் வி​சா​ரணைக்கு என்​டிஏ முழு ஒத்​துழைப்​பு அளித்​து வரு​கிறது. இவ்வாறு என்டிஏ தெரிவித்​துள்​ளது.

Spread the love