இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15400-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.300-ஐ கடந்து அதிர்ச்சியளித்துள்ளது.
பொதுவாகவே, சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இத்துடன், மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளதும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து உள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.1070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400-க்கும், பவுனுக்கு ரூ.8560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,23,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கடும் உயர்வு: தங்கம் விலையைப் போல வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.330-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3,30,000-க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.1,700 கோடி இழப்பு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1840 உயர்வு