சோழவந்தான் மே 25
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற குரு ஸ்தலமான அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் திருக்கோவில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை மற்றும் மகா யாக பூஜையுடன் லட்சார்ச்சனை துவங்கியது. வருகின்ற
26 ஆம் தேதி அதாவது நாளை செவ்வாய்க்கிழமை குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்வதை ஒட்டி லட்சார்ச்சனை தொடங்கியது. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மேஷம் ரிஷபம் கடகம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் மற்றும் 12 ராசிகளுக்கு உரிய நட்சத்திரங்களை சொல்லி பக்தர்கள் லட்சார்ச்ணையில் வேண்டிக் கொண்டனர். குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நடைபெற்ற லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம்எல்ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். சட்டமன்ற உறுப்பினருடன் ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் தியாகு தமிழன் தாமு மற்றும் சுந்தர் முல்லை சக்தி ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து மூன்றாம் நான்காம், ஐந்தாம் கால லட்சார்ச்சனை நடைபெற உள்ளது திங்கள்கிழமை இன்று லட்சார்ச்சனை
நிறைவு பெரும் செவ்வாய்க்கிழமை காலை யாகசாலை மகா சங்கல்பம் மகா யாகம் நடைபெறும் தொடர்ந்து
கடம் புறப்பாடாகி திருமஞ்சனம் மகா அரத்தி நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி ஆய்வாளர் சாவித்திரி தக்கார் மாலதி உள்ளிட்ட ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர் காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் குருவித்துறை ஊராட்சி சார்பில் ஊராட்சி செயலாளர் மனோபாரதி தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

More Stories
திருவான்மியூரில் பள்ளி, கோயில் அருகே விதிகளை மீறி செயல்படும் டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை
பழனி பகுதிகளில் வாய்க்கால்களை தூர் வார வேண்டும்
26-05-26