சென்னை: சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் காட்டாங்குளத்தூர் யார்டில் பொறியியல் பணி நடைபெறுவதால், கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு இன்று (25-ம் தேதி) காலை 10.56, பகல் 11.40, நண்பகல் 12.28 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கூடுவாஞ்சேரி -செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு நண்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு இன்று நண்பகல் 12, மதியம் 1.10, 1.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு மதியம் 2.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

More Stories
“விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு தனி அதிகாரமா?” – பெ.சண்முகம் காட்டம்
தொடரும் காவல் மரணங்கள்; முதல்வர் வாய் திறப்பது எப்போது? – மு.க.ஸ்டாலின்
அமைச்சர்கள் மோதலால் அதிகாரிகள் அப்செட்”