விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்
பழனி மே 26
பழனி ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் ரவி தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் கௌசல்யா தேவி, தோட்டக்கலை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, பொதுப்பணி துறை அலுவலர் சங்கரநாராயணன், மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். அவர்கள் கூட்டத்தில் கூறியதாவது:
கீரனூர் பகுதியில் வாய்க்கால் கரையை உடைத்து தண்ணீர் எடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும் என்றும். வரதமா நதி அணை தொடர்புடைய குளங்களில் தண்ணீர் வராததால் விளைநிலங்கள் தரிசாகும் நிலை உள்ளது. எனவே நீர் வரும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். நீர்நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கு மட்டும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். செங்கல் சூளைகளுக்கு மண் எடுப்பதை கண்காணித்து தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

More Stories
இந்து சமத்துவ கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
கரூர் மாவட்டம்
பழனி