May 29, 2026

உள்நாட்டில் தயாரிக்கப்படும் 5-ம் தலைமுறை போர் விமானத் திட்டத்துக்கு டாடா, எல்&டி தேர்வு

புதுடெல்லி: விமானப்​படை பயன்​பாட்​டுக்கு ஐந்​தாம் தலைமுறையை சேர்ந்த நவீன நடுத்தர ரக போர் விமானத்தை உள்​நாட்​டில் தயாரிக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இத்​திட்​டத்​தில் முன்​னணி நிறு​வனங்​கள் பங்​கேற்க விருப்ப கோரிக்​கையை பாது​காப்​புத்​துறை அமைச்​சகம் வெளி​யிட்​டது. இதற்கு பல நிறு​வனங்​கள் விண்​ணப்​பம் செய்​தன. அவற்​றில் டாடா, எல் & டி மற்​றும் பிஇஎம்​எல் நிறு​வனத்​துடன் இணைந்து பாரத் ஃபோர்ஜ் ஆகிய நிறு​வனங்​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளன.

ஐந்​தாம் தலை​முறை போர் விமான திட்டம், இந்​தி​யா​வின் மிக லட்​சி​ய​மான திட்​டம் ஆகும். 2030-ம் ஆண்​டுக்​குப்​பின் இந்​திய விமானப் படை​யின் போர்த் திறனின் முது​கெலும்​பாக 5-ம் தலை​முறை போர் விமானம் விளங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இரண்டு என்​ஜின்​கள் கொண்ட ரேடாரில் சிக்​காத தொழில்​நுட்​பம் கொண்ட போர் விமான​மாக இது தயாரிக்​கப்​பட​வுள்​ளது. இதில், அதிநவீன சென்​சார் ஃபியூஷன், ஆயுதங்​கள், செயற்கை நுண்​ணறிவு அடிப்​படையி​லான கருவி​கள், மற்​றும் நெட்​வொர்க்​-சென்ட்​ரிக் போர் முறைத் திறன் ஆகியவை இடம்​பெறவுள்​ளன.

இந்த விமானத்​தின் ரூ.16,000 கோடி மதிப்​பிலான உள்​கட்​டமைப்பு திட்​டத்​துக்கு ஆந்​தி​ரா​வின் சத்​ய​சாய் மாவட்​டத்​தில் ஆந்​திர முதல்வர் சந்​திர​பாபு நாயுடு, பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் ஆகியோர் கடந்த 15-ம் தேதி அடிக்​கல் நாட்​டினர். இதை இந்​தி​யா​வின் பாது​காப்பு வரலாற்​றில் ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க அத்​தி​யா​யம் என்று ராஜ்​நாத் சிங் குறிப்​பிட்​டார். இந்த முயற்சி ஆந்​திரப் பிரதேசத்​திற்கு ‘ஒரு புதிய யுகத்​தை’ கொண்​டு வரும்​ என்​று சந்​திர​பாபு நா​யுடு கூறி​னார்​.

Spread the love