சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வர் விஜய் 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், பெரும்பான்மையான கடைகள் மூடப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையாக இருந்தால், இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கைகள் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக உள்ளன.
எனவே, எத்தனை மதுக்கடைகள் கடந்த 26-ம் தேதிக்குள் மூடப்பட்டன என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். அவற்றில் இதுவரை மூடப்படாத மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக இப்போது மூடப்படும் 717 மதுக்கடைகளும் வேறு இடங்களில் திறக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
“திறந்து வைப்பது அல்ல; எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே உண்மையான பெருமை” – மு.க.ஸ்டாலின்
பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் எதிர்காலத்தை தொலைக்க வேண்டாம்: எச்சரிக்கும் போக்குவரத்து போலீஸார்
“கவர்ச்சி அரசியல் செய்யும் நீர்க்குமிழி அல்ல; அதிமுக மாபெரும் மக்கள் பேரியக்கம்” – பழனிசாமி பெருமிதம்