June 2, 2026

ஈரானில் அமெரிக்காவின் எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்திய சீனா

வாஷிங்டன்: ஈ​ரானின் தென்​மேற்​குப் பகு​தி​யில் கடந்த மாதம் விபத்​துக்​குள்​ளான அமெரிக்கா​​வின் எஃப்​-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்​பான தோளில் வைத்து இயக்​கும் ஏவு​கணை மூலம் சுட்டு வீழ்த்​தப்​பட்​டிருக்​கலாம் என்று புல​னாய்வு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து என்​பிசி நியூஸ் ஊடகம் தெரி​வித்​துள்​ள​தாவது: கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்கா – ஈரான் இடையே போர் மூண்ட சூழலில், சீனா மறை​முக​மாக ஈரானுக்கு ராணுவ உதவி​களை வழங்​கி​யிருக்​கலாம் என்று கூறப்​படு​கிறது.

குறிப்​பாக, ரேடார்​களில் சிக்​காமல் பறக்​கும் ‘ஸ்​டெல்த்’ தொழில்​நுட்​பம் மற்​றும் அதிதூர இலக்​கு​களைக் கண்​காணிக்​கும் ரேடார் அமைப்​பு​களை ஈரானுக்கு சீனா வழங்​கிய​தாக நம்​பப்​படு​கிறது.

இத்​தகைய நவீன கருவி​கள் மூலம், அமெரிக்​கா​வின் எப்​-15 இ ஸ்டிரைக் ஈகிள் போன்ற அதிநவீன போர் விமானங்​களை ஈரானால் துல்​லிய​மாகக் கண்​காணிக்க முடிந்​திருக்​கலாம் என்று அமெரிக்க அதி​காரி​கள் கருதுகின்​றனர். இவ்​வாறு என்​.பி.சி தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து முன்​ன​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘‘அமெரிக்​கப் போர் விமானமானது தோளில் இருந்து ஏவப்​படும் ‘மேன்​பேட்​ஸ்’ வகை ஏவு​கணை​யால் தாக்​கப்​பட்​டது’’ என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

இந்நிலை​யில், அந்த ஏவு​கணை சீன தயாரிப்பு என்ற செய்தி வெளி​யாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மனிதர்​கள் தங்​கள் தோள்​களில் சுமந்து சென்​று, தாழ்​வாகப் பறக்​கும் விமானங்களைத் தாக்​கப் பயன்​படுத்​தும் இந்த சிறிய ரக ஏவுகணை​கள் பொது​வாக 7 அடி நீள​மும், 40 பவுண்ட்​ எடை​யும்​ கொண்​ட​வை ஆகும்​.

Spread the love