பழனி ஜூன் 2
கேரளா மாநிலம் கண்ணனூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்சனிதி வயது 25 இவர் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க கோரி, கண்ணனூரிலிருந்து நேபாள நாட்டின் எவரெஸ்ட் சிகரம் வரை, தனது முன் சக்கரம் இல்லாத பின் சக்கரம் மட்டும் கொண்ட ஒற்றைச் சக்கர சைக்கிளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்ணனூரில் தனது ஒற்றைச் சக்கர சைக்கிளில் பயணத்தை தொடங்கினார். பழனிக்கு நேற்று வருகை புரிந்தார். முன்னதாக பழனிக்கு வந்த அவரை அரிமா சங்கத்தினர் மற்றும் இரயில் பயன்படுத்துவோர் சங்கத்தினர் வரவேற்றனர். இதில் சிவகுமார், எஸ்வி நாகேஸ்வரன், அரிமா சுந்தரம், பாலசுப்பிரமணியம், சீனிவாசன் பங்கேற்றனர்

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு