June 4, 2026

பதிவுக்கு காத்திருக்கும் அண்ணாமலையின் புதிய கட்சி!

பாஜக தேசிய தலைவர்கள் சமரச முயற்சி தோல்வி?

தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்​ணா​மலை தனிக்​கட்சி அறி​விப்பை வெளி​யிடப் போகிறார் என்​பது பரபரப்​புச் செய்​தி​யாக இருக்​கும் நிலை​யில், “அவர் தனிக்​கட்சி முடி​வில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்​போது அவர் அறிவிக்​கப் போவதில்லை. புதன் மாலை 7 மணி வரைக்​கும் டெல்​லியி​லிருந்து சென்னை திரும்​புவதற்கு அண்​ணா​மலை ரிட்​டர்ன் டிக்​கெட் எடுக்கவில்லை. அதனால் இன்று அவர் சென்னை வரு​வதே சந்தேகம் தான்” என்று உறு​திபடச் சொல்​கிறார்​கள் அவருக்கு நெருக்​க​மான வட்​டத்​தில் இருப்​பவர்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் மேலும் சில விஷ​யங்​களை பகிர்ந்து கொண்ட அவர்​கள், “தமிழகத்​தில் புதி​தாக ஒரு கட்சி வரப்​போகிறது என இரண்டு நாட்​களுக்கு முன்​ன​தாக, காங்​கிரஸ் எம்​பி-​யான கார்த்தி சிதம்​பரம் போட்ட பதிவைப் பார்த்​திருப்​பீர்​கள். அது அண்ணா​மலையை மையப்​படுத்தி வந்த செய்​தி​தான். கரூரைச் சேர்ந்த ஒரு நபர் தேர்​தல் ஆணை​யத்​தில் புதி​தாக ஒரு கட்​சியை பதிவுக்கு சமர்ப்​பித்​திருக்​கிறார்.

‘தமிழக மக்​கள் கழகம்’ அல்​லது ‘தமிழக மக்​கள் கட்​சி’ என்ற பெயரில் இந்​தக் கட்சி பதிவுக்கு வந்​திருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள். இந்​தக் கட்​சி​யைத்​தான் அண்​ணா​மலை கையில் எடுக்​கப் போவதாக பேச்சு இருக்​கிறது. ஆனால், இது சம்​பந்​த​மாக தனக்கு நெருக்​க​மான வட்​டத்​தில் கூட யாரிட​மும் அண்​ணா​மலை இது​வரை மூச்​சு​விட​வில்​லை.

இதற்கு நடு​வே, ரஜினியை மூன்று முறை தனியே சந்​தித்​துப் பேசி இருக்​கிறார் அண்​ணா​மலை. இந்​தத் தகவல் கசிந்து தான், அண்ணாமலை​யுடன் ரஜினி​யும் கைகோக்​கப் போவ​தாக செய்​தி​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

எங்​களுக்​குத் தெரிந்​து, ‘எனக்​காக நீங்​கள் அண்​ணா​மலை​யுடன் சேர்ந்து பயணிக்க வேண்​டும்’ என்று தமிழக அரசியல் தலை​வர்​கள் சிலருக்கு ‘ஸ்​டார்’ நடிகர் ஒரு​வர் வேண்டுகோள் வைத்​திருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள். விஜய்​யின் வரு​கையை அண்​ணா​மலை மூல​மாக சமன் செய்​ய​முடி​யும் என அந்த ‘ஸ்​டார்’ நினைக்​கிறார். அவரிடம் சில உத்​தர​வாதங்​களை வாங்​கிக் கொண்டே அண்​ணா​மலை களத்​தில் இறங்கி இருப்பதாகத் தெரி​கிறது.

உண்​மை​யில் அண்​ணா​மலை பாஜக-வை விட்டு வில​கு​வதற்​காக டெல்லி செல்​ல​வில்​லை. ஏனென்​றால், பாஜக-​வில் இருந்து யாரும் யாரை​யும் விலக்க முடி​யாது. மூன்​றாண்​டு​களுக்கு ஒரு​முறை உறுப்​பினரை புதுப்​பித்​துக் கொள்ள வேண்​டும். அப்​படி புதுப்பிக்காவிட்​டாலே அவர்​கள் பாஜக உறுப்​பினர்​களாக தொடர முடி​யாது. தனக்கு வழங்​கப்​பட்​டுள்ள இசட் பிரிவு பாது​காப்பை திரும்​பப்​பெற வேண்​டும் என மத்​திய உள்​துறை​யிடம் கடிதம் கொடுக்​க​வும் ஒப்​புக்​காக தனக்கு வழங்​கப்​பட்ட தேசிய பொதுக்​குழு உறுப்​பினர் பதவியை ராஜி​னாமா செய்​வதற்​காக​வும் தான் டெல்லி சென்று நிதின் நவீனை​யும், அமித் ஷாவை​யும் சந்​தித்​திருக்​கிறார் அண்​ணா​மலை.

அப்​போது பாஜக-​வில் தனக்கு ஏற்​பட்ட சங்​கடங்களை​யும் இரு​வரிட​மும் விளக்கி இருக்​கிறார். இரு​வரும் அண்​ணா​மலையை சமா​தானம் செய்ய முயற்சி செய்​திருக்​கிறார்​கள். ஆனால், இந்த முயற்சி தோல்வி அடைந்ததாகத் தெரிகிறது.

இதற்​கிடை​யில், அண்​ணா​மலை பாஜக-​வில் இருந்து விலகிவிட்டதாக டெல்லி மீடி​யாக்​கள் செய்​தியை பரப்​பி​விட்​டன. இந்த செய்​தி​கள் வெளி​யானதுமே தமிழகத்​தில் உள்ள அண்ணாமலை ஆதரவு மாவட்​டப் பொறுப்​பாளர்​கள் சிலர், தாங்களும் தங்​கள் பதவி​களை ராஜி​னாமா செய்​வ​தாக சமூக வலை​தளங்​களில் செய்​தி​களை பதி​விட்​டார்​கள்.

இதி​லுள்ள ஆபத்தை உணர்ந்து மீண்​டும் அண்​ணா​மலைக்கு அமித் ஷாவிடம் இருந்து அழைப்பு வந்​திருக்​கிறது. அப்​போது, ‘நீங்​கள் தனி இயக்​கம் தொடங்​கு​வ​தாக இருந்​தால் பாஜக நிர்​வாகி​களை எக்காரணம் கொண்​டும் உங்​கள் பக்​கம் சேர்க்​கக் கூடாது’ என்று அமித் ஷா கட்​டளை​யிட்​ட​தாகத் தெரி​கிறது” என்று சொன்​னார்​கள்.

“அண்​ணா​மலை இன்​னும் ஒரு ஆறு மாத காலத்​துக்கு அரசி​யலை விட்டு ஒதுங்கி இருக்​கப் போகிறார். அந்த அவகாசத்​தில், தான் ஏற்கெனவே நடத்தி வரும் ‘வீ லீடர்​ஸ்’ அறக்​கட்​டளை​யின் செயல்பாடு​களை விசாலப்​படுத்தி அதைத்​தான் ஒரு அரசி​யல் இயக்​க​மாக மாற்​றும் திட்​டத்​தில் இருக்​கிறார்” என்று சொல்​லும் இன்​னொரு தரப்​பினர், “சமூக வலை​தளத்​தில் அண்ணாமலைக்காக பேசுபவர்​கள், ஆட்​டோ, பேருந்​து, கிரிக்​கெட் மட்​டை, வேன் என நாலைந்து சின்​னங்​களை பதி​விட்டு ‘இதில் தலை​வரின் புதிய கட்​சி​யின் சின்​ன​மாக எதை வைக்​கலாம் என்று உங்​கள் கருத்​தைச் சொல்​லுங்​கள்’ என ஆழம் பார்க்​கிறார்​கள்” என்கிறார்​கள்.

ராம சீனி​வாசன் புதிய தலை​வர்?

இதற்​கிடையே, கட்​சி​யின் மூத்த தலை​வர் ராம சீனி​வாசன் பாஜக மாநில தலை​வ​ராக நியமிக்​கப்​படு​வார் என்​றும் தகவல்​கள் கசிகின்றன. பல மாநிலங்​களில் ராஜ்யசபா தேர்​தலுக்​கான தேதி அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், இதற்கு சம்​ம​தித்​தால் நயி​னார் நாகேந்​திரன் மத்​தி​ய அமைச்​ச​ராக்​கப்​படலாம்​ என்​றும்​ கட்சியின் அமைப்புச் செயலாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்படலாம் என்றும் பாஜக வட்​டாரத்​தில்​ ஒரு செய்​தி றெக்​கை விரிக்​கிறது.

Spread the love