June 5, 2026

யுரேனியத்தை பெற ஒப்பந்தம் தேவையில்லை.. இப்போதே எடுக்க முடியும்.. ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பெறுவதற்கு அந்நாட்டுடன் அமெரிக்காவுக்கு ஒரு ஒப்பந்தம் தேவையில்லை. அதை இப்போதே எங்களால் எடுக்க முடியும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படைகளின் தாக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி மத்திய கிழக்கில் போர் மூண்டது. தொடர்ந்து நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் போர் பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டது, சர்வதேச பொருளாதாரத்தை சீர்குலைத்திருக்கிறது. இந்தசூழலில் தான், ஏப்ரல் 8-ம் தேதி பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் அமெரிக்கா – ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

Strait of Hormuz

ஹார்முஸ்கோப்புபடம்

தொடர்ந்து, போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. அதனை ஈரான் ஒத்து கொள்ளாததாலும், லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருதாலும், பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமலேயே இருந்து வருகிறது.

Spread the love