சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில், இதுவரை 3 முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம், 2026-ஆம் ஆண்டு, ஜூன் 18-ம் நாள், வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அச்சமயம் தமிழ்நாடு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். 2026-27-ம் நிதியாண்டுக்கான புதிய அரசின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
தவெக கூட்டணிக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை: அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிபிஐ
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசனை: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்