June 7, 2026

இந்தியாவுடன் இணைந்து சுகோய்-57 போர் விமானம் தயாரிக்க தயார்: அதிபர் புதின் அறிவிப்பு

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: இந்தியா​விற்​குத் தங்​களது அதிநவீன சுகோய்-57 ஐந்​தாம் தலை​முறைக்​கான போர் விமானங்​களை விற்​பனை செய்​ய​வும், அவற்றை எவ்​விதக் கட்​டுப்​பாடு​களு​மின்றி இந்​தி​யா​வுடன் இணைந்து கூட்​டாக மேம்​படுத்​தித் தயாரிக்​க​வும் தயா​ராக உள்​ள​தாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உலகளா​விய செய்தி நிறு​வனங்​களின் தலை​வர்​களை புதின் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, இந்​தி​யப் பத்​திரி​கை​யாளர் ஒரு​வரின் கேள்விக்​குப் பதிலளித்த அவர் இந்த முக்கிய திட்​டத்தை முன்​வைத்​தார். இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: ஐந்​தாம் தலை​முறை போர் விமான​மான சுகோய்​-57 ரகத்தை இணைந்து தயாரிக்​கு​மாறு எங்​களது நண்​பர்​களான இந்​தி​யா​விற்கு நாங்​கள் அழைப்பு விடுத்​துள்​ளோம்.

தற்​போதைய நிலை​யில் இதுவே உலகின் மிகச்​சிறந்த போர் விமானம் என்று நான் கருதுகிறேன். எங்​களது இந்த முன்​மொழிவை பரிசீலிப்​ப​தாக இந்​தி​யத் தரப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.கொள்கை ரீதி​யாகப் பார்த்​தால், இந்த அதிநவீன விமானம் ரஷ்யா மற்​றும் இந்​தி​யா​வின் கூட்​டுத் தயாரிப்​பாகவே இருந்​திருக்க வேண்​டும். ஆனால், கூட்​டுத் திட்​டத்​திலிருந்து இந்​தியா வில​கியதைத் தொடர்ந்​து, நாங்​கள் அதனைத் தனித்தே தயாரித்து முடித்​தோம்.

தற்​போதும் கூட, இதில் தொழில்​நுட்​பங்​களை வழங்​கு​வ​திலோ அல்​லது மேலும் மேம்​படுத்​து​வ​திலோ எங்​களுக்கு எவ்​விதக் கட்​டுப்​பாடு​களும், எல்​லைகளும் இல்​லை. இந்​தி​யா​வுடன் எந்த நிபந்தனையும் இல்லாமல் இணைந்து பணி​யாற்ற நாங்​கள் முற்​றி​லும் தயா​ராக உள்​ளோம்​. இவ்​வாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறி​னார்​.

Spread the love