ஏழுமலையானுக்கு மே மாதம் ரூ.120 கோடி காணிக்கை
திருமலை: கோடைக்காலம் என்பதால் கடந்த மே மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதியது. 25 லட்சத்து 46,168 பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.
தேவஸ்தான வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. அதனால் உண்டியல் காணிக்கை மே மாதம் ரூ.120 கோடி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் 1.12 கோடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
திருமலையில் 1.21 கோடி லட்டு பிரசாதம் விற்பனையாகி உள்ளது. நேர்த்திக்கடனான 14,38,385 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
கடந்த மே மாதத்தில் தினமும் சராசரியாக 17 மணி 25 நிமிடம் சாமானிய பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதிகபட்சமாக மே 24-ம் தேதி 98,058 பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

More Stories
ஸ்ரீ முருகன் வைகாசி விசாக விழாக் குழுவினர் நடத்திய54 ஆம் ஆண்டு வைகாசி விசாக உத்சவ விழா
கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா கோலாகலம்
திருப்போரூர் அடுத்த கல்வாய் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.