பிரதமர் நரேந்திர மோடியை தனது நல்ல நண்பர் . இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரு நாடுகளுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு நிலவுவதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்
பிரதமர் மோடி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. அதனால் இந்தியாவுடன் ஒரு நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை நிச்சயமாக எட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று டிரம்ப் கூறினார்.ஆனால், அதே நேரத்தில் இந்தியா பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு அதிக இறக்குமதி வரிகளை விதித்து வந்ததாகவும், தனது நிர்வாகம் அதை சமநிலைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மொத்த Templateயும் உடைத்த தவெக தலைவர்!
நீண்ட காலமாக இந்தியா அமெரிக்காவிடம் அதிக வரிகளை வசூலித்தது. ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. தற்போது இந்தியாவுடனான வர்த்தகத்தின் மூலம் அமெரிக்கா நல்ல வருமானம் ஈட்டி வருகிறது என்று டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையில், இடைக்கால இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க அதிகாரிகள் குழு சமீபத்தில் இந்தியா வந்திருந்தது.
இந்த சந்திப்புகள் நல்ல ஒத்துழைப்பு மற்றும் நடைமுறை அணுகுமுறையுடன் நடைபெற்றதாக இந்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒப்பந்தத்தை விரைவில் நிறைவு செய்ய உறுதி பூண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்
மேலும், அமெரிக்காவின் புகழ்பெற்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் இந்தியாவில் வணிகம் செய்வதில் அதிக இறக்குமதி வரி காரணமாக சிரமங்களை சந்தித்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். முன்பு ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா 200 சதவீதம் வரை வரி விதித்தது. அதனால் அந்த நிறுவனம் இந்தியாவிலேயே தனது தொழிற்சாலையை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அவர் கூறினார்.
அதே சமயம், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய எந்தவித கூடுதல் தடைகளும் இல்லை என்றும் அமெரிக்கா மிகவும் திறந்த வர்த்தக கொள்கையை பின்பற்றுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு 12.5% கூடுதல் வரி…
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி, டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கான முன்னெடுப்புகள் குறித்து இரு நாடுகளும் கூட்டு அறிக்கை வெளியிட்டிருந்தன. அதன்படி இந்தியாவுக்கான சில சுங்க வரிகளை குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த சில பரஸ்பர சுங்க வரி நடவடிக்கைகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, புதிய வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் இந்தியா – அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு இரு நாடுகளிலும் நிலவி வருகிறது.

More Stories
இந்தியாவில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஆஸ்திரேலிய நிறுவனம்
உலக சுற்றுச்சூழல் தினம்,
அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவுடன் 23 திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்பு: மம்தாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி