February 7, 2026

முஸ்லிம் தலைவர்களை புறக்கணிக்கிறாரா ராகுல் காந்தி?

புதுடெல்லி: காங்​கிரஸ் கட்​சியி​லிருந்து 2 மாதங்​களுக்கு முன் வில​கிய​வர் ஷகீல் அகமது. இவர், பிஹார் காங்​கிரஸாரிடையே முக்​கிய​மாக இருந்த முஸ்​லிம் தேசி​யத் தலை​வர்.

நேற்று முன்​தினம், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி​யைப் பகிரங்​க​மாக விமர்​சித்​திருந்​தார் ஷகீல். இவர் முஸ்​லிம்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளிப்​ப​தில்லை என்று கூறியது கட்​சிக்​குள் பெரும் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.இதுகுறித்து மாநிலங்​களவை​ முன்​னாள் எம்​பி​ ஷகீல் அகமது கூறும்​போது, ”முஸ்​லிம்​கள் காங்​கிரஸுக்கு வாக்​களித்து வருகின்றனர். காங்​கிரஸும் முஸ்​லிம்​களின் வாக்​கு​களை விரும்​பு​கிறது. பாஜக​வும் முஸ்​லிம்​கள் தமக்கு வாக்​கு​களிக்க வேண்​டும் என விரும்​பு​கிறது, ஆனால், பாஜக தலை​வர்​கள் முஸ்​லிம் சமூகத்​துக்கு எதி​ராகப் பேசுகிறார்​கள்.

ஒரு கட்சி யாருக்​காவது ஆதர​வாகப் பேசி​னால் இது, வாக்​கு​களைப் பெறு​வதற்​காகவே என்று மக்​கள் கருதுகின்​றனர். அவர்​களை ஏமாற்​று​வதற்​காகவே அப்​படிச் சொல்​லப்​படு​கிறது என்று கூட சிலர் கருதக்​கூடும்” என்றார்.

முஸ்​லிம்​கள் புறக்​கணிக்​கப்​படு​வ​தாகப் புகார் கூறிய ஷகீல், முஸ்​லிம் தலை​வர்​களு​டன் புகைப்​படம் எடுத்​துக் ​கொள்ள காங்​கிரஸ் கட்​சி​யின் உயர்​மட்​டத் தலைமை தயக்​கம் காட்​டு​வ​தாக​வும் தெரி​வித்​திருந்​தார். இந்த புகாருக்கு பின் தனக்கு கொலை மிரட்​டல் வரு​வ​தாக​வும் ஷகீல் அகமது புகார் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து காங்​கிரஸின் மூத்த தலை​வர்​களில் முக்​கிய​மானவ​ரும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான ராஷீத் ஆல்வி கூறும்​போது, ‘முஸ்​லிம் தலை​வர்​களு​ட​னானப் பேச்​சு​வார்த்​தைக்​காக ஒரு பயனுள்ள தளம் இல்​லை. முஸ்​லிம் தலை​வர்​களைச் சந்​திக்க ராகுல் காந்​திக்கு நேரம் இல்​லை. ராகுலைச் சந்​திப்​பது எளிதல்ல. இது​போன்ற காரணங்​களால் முஸ்​லிம் தலை​வர்​கள் பல கால​மாக கட்​சியி​லிருந்து வில​கி​யிருப்​பது கவலை தரு​கிறது. இந்த முஸ்​லிம் தலை​வர்​கள் அதி​காரத்​துக்​காக கட்​சியை விட்டு வெளி​யேற​வில்​லை. முஸ்​லிம் தலை​வர்​கள் புறக்​கணிக்​கப்​படு​வது தொடர்ந்​தால், அசாதுதீன் ஒவைசி போன்ற தலை​வர்​கள் தொடர்ந்து உரு​வாகி விடு​வார்​கள்’ என்​றார்.

தீர்வு காண வேண்டும்: இவர்​களுக்கு பதிலளிக்​கும் வகை​யில், பிஹாரின் கட்​டிஹார் மக்​களவை எம்​பி​யும் காங்​கிரஸின் மற்​றொரு முக்​கிய முஸ்​லிம் தலை​வரு​மான தாரிக் அன்​வர் கூறுகை​யில், ‘காங்​கிரஸ் கட்​சிக்​குள் அப்​படிப்​பட்ட அதிருப்தி இருக்​கு​மா​னால், அது ஏன் இருக்​கிறது என்​பதை ஆராய்ந்​து, அதற்கு முறை​யாகத் தீர்வு காணப்பட வேண்​டும்.

காங்​கிரஸ் கட்சி ஒரு தேசி​யக் கட்​சி, அந்​தக் கட்சி வலு​வாக இருப்பதும், தன்னை மேம்​படுத்​திக் கொள்​வதும், எதிர்​காலத்​தில் நாட்​டை பாது​காக்​கப் பாடு​படு​வதும் ஜனநாயகத்​துக்கு மிக​வும் அவசி​யம். முஸ்​லிம் தலை​வர்​கள் தாங்​கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்​தால், அது குறித்து கட்​சி​யின் உயர்​மட்​டத் தலை​வர்​களு​டன் நேரில் விவா​திக்க வேண்​டும்’ எனத் தெரி​வித்​துள்​ளார்.

உ.பி.​யில் 2027-ல் வரவிருக்​கும் சட்​டப்​பேரவை தேர்​தலுக்​காக காங்​கிரஸ் தீவிர​மாக ஆயத்​த​மாகி வரு​கிறது. இம்​மாநிலத்​தில் அதி​க​மாக உள்ள முஸ்​லிம்​களின் வாக்​கு​கள் காங்​கிரஸின் முக்​கியக் குறி​யாக உள்​ளது. இச்​சூழலில் காங்​கிரஸுக்கு எதி​ராக அதன் முஸ்​லிம் தலை​வர்​கள் விமர்​சனம் செய்​வது, கட்சி தலை​மைக்கு பிரச்​சினை​யாகி விட்​டது. உ.பி.​யின் முக்​கிய முஸ்​லிம்​ தலை​வ​ரான நசீ​முத்​தீன்​ சித்​திக்​கீ​யும்​ காங்​கிரஸிலிருந்​து வில​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார்​.

Spread the love