February 7, 2026

66 பந்​துகளில் 136 ரன்​கள் விளாசிய ஹாரி புரூக்

கொழும்பு: இலங்கை – இங்​கிலாந்து அணி​கள் இடையிலான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 50 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்புக்கு 357 ரன்​கள் குவித்​தது.

தொடக்க வீரர்​களான ரேஹான் அகமது 24, பென் டக்​கெட் 7 ரன்​களில் நடையை கட்​டினர். சீனியர் பேட்​ஸ்​மே​னான ஜோ ரூட், ஜேக்​கப் பெத்​தேல் ஜோடி சீராக ரன்​கள் சேர்த்து ஆட்​டத்தை முன்​னெடுத்​துச் சென்​றது. தனது 5-வது அரைசதத்தை கடந்த ஜேக்​கப் பெத்​தேல் 72 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜெப்ரே வான்​டேர்சே பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் ஹாரி புரூக் அதிரடியாக விளை​யாடி​னார். தனது 3-வது சதத்தை விளாசிய ஹாரி புரூக் 66 பந்​துகளில், 9 சிக்​ஸர்கள், 11 பவுண்​டரி​களு​டன் 136 ரன்​களும் பொறுமை​யாக விளையாடி தனது 20-வது சதத்தை கடந்த ஜோ ரூட் 108 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 9 பவுண்​டரி​களு​டன் 111 ரன்​களும் சேர்த்​தனர். இதைத் தொடர்ந்து 358 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இலங்கை அணி 33 ஓவர்​கள் வீசப்​பட்ட நிலையில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது.

Spread the love