இந்திய மகளிர் அணி டி20 அணி அரையிறுதிவரை முன்னேறுவதே கடினம் என்று அதிர்ச்சி கருத்தை தெரிவித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
பாகிஸ்தானை எதிர்த்து இந்திய மகளிர் அணி பெரிய வெற்றி பெற்றாலும், அணியின் நிலைமை குறித்து முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக எச்சரித்துள்ளார். ரிச்சா கோஷின் இறுதிநேர அதிரடி மட்டுமே இந்தியாவை 150க்கு மேல் கொண்டு சென்றதாகவும், அணியில் பல பிரச்சினைகள் உள்ளதால் அரையிறுதி தகுதி கூட சவாலாக இருக்கும் எனவும், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்துவது கடினம் எனவும் அவர் கூறியுள்ளார்.
2026 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை நேற்று தொடங்கிய இந்திய அணி, முதல் போட்டியிலேயே பரம எதிரியான பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. பந்துவீச்சில் மிரட்டிய இந்திய ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மிரட்டிவிட்டனர். 5 விக்கெட்டுகள் வீழ்த்தி தீப்தி சர்மா பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தார்.

இந்தியா – பாகிஸ்தான்cricinfo
இந்திய மகளிர் அணி ஒரு மாபெரும் வெற்றியுடன் தொடங்கியிருக்கும் சூழலில், இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெறுவதே கடினம் என்று முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிர்ச்சி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

10 ரன் மட்டுமே.. 5 விக்கெட்டுகள் வீழ்த்திய தீப்தி சர்மா.. பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா!
தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், ‘நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட இந்திய அணி சுமாரான பேட்டிங்கையே வெளிப்படுத்தியது. 150 ரன்கள் வரவேண்டிய இடத்தில் ரிச்சா கோஸின் கடைசிநேர அதிரடியான பேட்டிங் கூடுதலாக 20 ரன்கள் அடிக்க உதவியது. இப்போதல்ல கடைசி சில தொடர்களில் கூட இந்தியா சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தது. அணியில் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன, இந்திய அணி அரையிறுதிக்கு செல்வதே கடினம் என்று நினைக்கிறேன்.
ஒருவேளை இந்தியா அரையிறுதிக்கு செல்லவேண்டுமானால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வேண்டும். தென்னாப்பிரிக்காவிடம் தோற்றுவிட்டால் ஆஸ்திரேலியாவை அடிப்பது மிகவும் கடினமாகிவிடும், இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக வீசக்கூடிய பவுலர்களும், வேகமாக வீசக்கூடிய பவுலர்களும் நம்மிடம் இல்லை. கிராந்தி கவுட் வேகமாக வீசினாலும் அவர் கட்டுக்கோப்பாக வீசுவதில்லை, அனைத்து ஆடுகளத்திலும் ஸ்பின்னர்களை கொண்டு வெல்லமுடியாது. அரையிறுதிக்கே இந்தியா சென்றாலும் கோப்பை வெல்லும் என நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

More Stories
வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன் மீது தாக்குதல்
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதியில் பி.வி.சிந்து