ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்திற்குட்பட்ட மேலமடை கிராமத்திற்கு தனி கிராம நிர்வாக அலுவலகம் (வி.ஏ.ஓ.) அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் மேலமடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அரசுச் சேவைகளைப் பெற சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பயணித்து கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முதியோர், பெண்கள் மற்றும் மாணவர்கள் சிரமமடைந்து வருவதால், மேலமடை கிராமத்திற்கு தனி வி.ஏ.ஓ. அலுவலகம் அமைத்து தனி குரூப்பாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலமடை கிராமத் தலைவர் ஜெய சருவந்தம் தலைமையில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு வழங்கப்பட்டது.

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்