August 1, 2026

CWG 2026: மூட்டுவலியை வென்று பதக்கம் வென்ற சீமா

விளை​யாட்டு உலகில் தடகள வீராங்​கனை பிரசவத்​துக்கு பிந்தைய மீள்​வருகை என்​பது மிகப்​பெரிய சவாலாகும். ஆனால், இந்​தி​யத் வட்டு எறிதல் வீராங்​க​னை​யான சீமா காளிராம்னாவுக்கு, பிரசவத்​துக்கு பிறகு​தான் வாழ்​வின் உண்மையான போராட்​டமே தொடங்​கியது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்​கலப் பதக்​கம் வென்று இந்​தி​யா​வுக்கு பெருமை சேர்த்​துள்ள சீமா​வின் இந்த வெற்​றி, வெறும் விளை​யாட்டு சாதனை மட்​டுமல்ல, நோயை​யும் தடைகளை​யும் உடைத்​தெறிந்த ஒரு தாயின் அசைக்க முடி​யாத தன்​னம்​பிக்கை பயணம் ஆகும்.

தளராத மனம்

கடந்த 2022-ம் ஆண்டு தனது மகன் ருத்​ராவைப் பெற்​றெடுத்த சில வாரங்​களி​லேயே சீமாவுக்கு ‘ஆர்த்​ரிடிஸ்’ எனப்​படும் தீவிர மூட்​டு​வலி நோய் ஏற்​பட்​டது. வட்டு எறிதல் வீராங்​கனை தனது முழு பலத்​தை​யும் திரட்ட எந்த மூட்​டு​களை நம்​பி​யிருக்​கிறாரோ, அதே மூட்​டு​களை இந்த நோய் கடுமை​யாகத் தாக்​கியது. இதனால் வீட்​டில் அன்​றாடப் பொருட்​களைக் கூடத் தூக்க முடி​யாமல் கடுமை​யான வலி​யில் துடித்​துள்​ளார் 27 வயதான சீமா.

சீமா​வின் கணவர் ரவீந்​தர் காளி​ராம்​னா, காயங்​கள் காரண​மாகத் தனது விளை​யாட்டு வாழ்க்​கை​யைத் தொடர முடி​யாமல் போன முன்​னாள் தேசிய சாம்​பியன் ஆவார். வட்டு எறிதல் வட்​டத்​துக்​குள் இருக்​கும் எதி​ராளி​களை சந்​திக்க முடி​யாத நிலை​யில், நோயை எதிர்த்​துப் போராடும் தன் மனை​விக்கு பயிற்​சி​யாள​ராகத் தன்னை மாற்​றிக்​கொண்​டார் ரவீந்​தர் காளி​ராம்​னா.

ரவீந்​தர் காளி​ராம்னா கூறும்​போது, “இப்​படி ஒரு நோய் இருக்​கிறது என்​பதே எனக்​குத் தெரி​யாது. என்ன செய்​வதென்றே தெரி​யாமல் தவித்​தோம். இதை மருந்​தால் முழு​மை​யாகக் குணப்​படுத்த முடி​யாது, கட்​டுப்​படுத்த மட்​டுமே முடி​யும் என்​ப​தால் ஆயுர்​வேத முறை​களை​யும், உணவுப் பழக்​கவழக்​கங்​களை​யும் மாற்​றினோம். ஊறு​காய், எலுமிச்சை போன்ற புளிப்பு உணவு​களை தவிர்க்க வேண்​டி​யிருந்​தது. மெல்ல மெல்​லவே சீமா பயிற்​சிகளைத் தொடங்​கி​னார்” என்​றார்.

தாயா​வதற்கு முன்பு சீமா​வின் சிறந்த வட்டு எறிதல் வீச்சு 48.08 மீட்​ட​ராக இருந்​தது. நோயைக் கட்​டுப்​படுத்தி 2024-ல் மீண்​டும் களத்​துக்கு திரும்​பிய அவர், இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் நடந்த இந்​திய சாம்​பியன்​ஷிப்​பில் 59.73 மீட்​டர் தூரம் வீசி தனது வாழ்​நாளின் சிறந்த சாதனையை பதிவு செய்​தார். தற்​போது கிளாஸ்​கோ​வில் நடை​பெற்று வரும் காமன்​வெல்த் விளை​யாட்​டில் 58.65 மீட்​டர் தூரம் எறிந்து வெண்​கலப் பதக்​கம் வென்று அசத்​தி​யுள்​ளார்.

கல்​வி​யிலும் சாதனை

உடலை தேற்றி வந்த அதே வேளை​யில், பிவானி​யில் உள்ள சவுத்ரி பான்சி லால் பல்​கலைக்​கழகத்​தில் உடற்​கல்​வியலில் முனை​வர் பட்​டத்​துக்​கான ஆராய்ச்​சி​யிலும் சீமா ஈடு​பட்டு வரு​கிறார். நேர்​மறை எண்​ணங்​கள் மற்​றும் மனக் காட்​சிப்​படுத்​தல் என்​பது விளை​யாட்டு வீரரின் செயல்​திறனை எவ்​வாறு உயர்த்​தும் என்​பது பற்​றியதே இவரது ஆராய்ச்​சி​யின் கருப்​பொருளாகும். தான் எதிர்​கொண்ட உடல்​நலப் பிரச்​சினை​களி​லிருந்து மீண்டு வர இந்த மனக் காட்​சிப்​படுத்​தல் உத்​தி​யையே அவர் சொந்த வாழ்க்​கை​யிலும் பயன்​படுத்​தி​யுள்​ளார்.

அம்​மா, பதக்​கம் கொண்டு வா

இந்​திய ராணுவத்​தில் பணி​யாற்​றிய முன்​னாள் தடகள வீரரின் மகளான சீமா, நிலை​யான வேலை எது​வுமின்றி விளை​யாட்​டு, கல்வி ஆராய்ச்​சி, குழந்​தைப் பராமரிப்பு என அனைத்​தை​யும் ஒரே நேரத்​தில் வெற்​றிகர​மாகக் கையாண்டு வரு​கிறார்.

காமன்​வெல்த் விளை​யாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக ஸ்காட்லாந்துக்கு புறப்​படு​வதற்கு முன், அவரது சிறு வயது மகன் ருத்ரா வைத்த ஒரே கோரிக்​கை, “அம்​மா, எனக்கு விளை​யாட ஒரு பதக்​கம் கொண்டு வாருங்​கள்” என்​பது​தான். மகனின்​ ஆசையை நிறைவேற்​றி, தன்​ கைகளில்​ பதக்​கத்​தோடு தாயகம்​ திரும்புகிறார்​ இந்​த இரும்​பு பெண்​மணி.

Spread the love