April 4, 2026

DMK MATHIVANTHAN CAMPAIGN 

இராசிபுரம்:கிராமம் கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன்.

 நான் பதவியேற்ற பிறகு கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும்  செய்து கொடுத்து விட்டேன் மறக்காமல் திமுகவிற்கு வாக்களியுங்கள் மக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் மா.மதிவேந்தன். 

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு களத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் மா.மதிவேந்தன் தனது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றியம் சுற்றி உள்ள கிராமங்களில் பிரச்சாரத்தை துவங்கினார்.

வெண்ணந்தூர் ஒன்றியத்தின் மூலக்காடு, போயர் தெரு, இந்திரா நகர், பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டார் .

Spread the love