அமெரிக்க அதிபர் டொனால்ட் கடந்த ஆண்டு அமெரிக்காவில் குடியேற்றத்தை தடுக்க பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டார்.அதில் ஒன்றுதான் H-1B விசாக்களுக்குகான கட்டணத்தை உயர்த்தினார்.ஒரு லட்சம் டாலர் செலுத்தினால் H-1B விசா வழங்கப்படும் என்று உத்தரவிட்டார். இது இந்திய மதிப்பின் 83 லட்சம் ஆகும்.இதனால், அமெரிக்காவில் தகுதிவாய்ந்த ஊழியர்களை நியமிக்க முடியாமல் போனது.
H-1B விசாக்களுக்குகான கட்டணம் சட்டவிரோதமானது
இதை எதிர்த்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மாநில அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் நீதிபதி லியோ சொரோகின் முன் விசாரனைக்கு வந்தது அப்போது,H-1B விசா விண்ணப்பங்களுக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் டாலர் கட்டணம் சட்டவிரோதமானது அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இந்த சட்டத்தை இயற்ற அதிபருக்கு அதிகாரம் இல்லை.எனவே, புதிய விசா கட்டணச் சட்டம் முற்றிலும் செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.இந்த தீர்ப்பை அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரின் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
இந்தியா மற்றும் இந்திய வம்சாவளியினர் ஆய்வு அறக்கட்டளையின் (FIIDS) கொள்கை மற்றும் வியூகப் பிரிவு தலைவர் கந்தேராவ் காண்ட், “இந்த தீர்ப்பு அமெரிக்காவின் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான போட்டித்தன்மையை பாதுகாக்க உதவும். உலகளாவிய திறமையான பணியாளர்களை அமெரிக்கா தொடர்ந்து ஈர்ப்பது அவசியம் என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களுக்கு என்ன பயன்?
- H-1B விசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்கப்பட்டிருந்தால், வெளிநாட்டு திறமையான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டிருக்கும்.
- குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் இது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
- தற்போது நீதிமன்றத் தீர்ப்பால் அந்த சுமை நீங்கியுள்ளதால், நிறுவனங்கள் திறமையான பணியாளர்களை எளிதாக பணியமர்த்த முடியும்.
இந்தியர்களுக்கு ஏன் முக்கியம்?
அமெரிக்காவில் H-1B விசா பெறுபவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களே. பல ஆண்டுகளாக இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான முக்கிய வழியாக இந்த விசா இருந்து வருகிறது. இது பலரின் தொழில் வளர்ச்சிக்கும், வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டு தரவுகளின்படி, வழங்கப்பட்ட H-1B விசாக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. 2,83,397 இந்தியர்கள் இந்த விசாவைப் பெற்றுள்ளனர். இது இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவின் 46,680 பேரை விட ஆறு மடங்குக்கும் அதிகமாகும்.
அடுத்து என்ன நடக்கும்?
எனினும், இந்த தீர்ப்பால் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிட்டதாக கருத முடியாது என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நிர்வாகம் விரும்பினால், சட்டத்திற்கு முரணாக இல்லாத பிற நிர்வாக நடைமுறைகள் மூலம் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் டொனால்ட் டிரம்ப், புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்கும் அறிவிப்பில் கையெழுத்திட்டிருந்தார். தற்போது அந்த கட்டணத்தை நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
கட்டண உயர்வில் மோசடி
டிரம்ப் விசா கட்டணங்களை உயர்த்தியதிலிருந்து, எச்-1பி விசா விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. பிப்ரவரி 15 ஆம் தேதி நிலவரப்படி, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் 85 கட்டணங்களை மட்டுமே பெற்றுள்ளதாக நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெளியிட்ட தரவுகளின்படி, முறையாக தாக்கல் செய்யப்பட்ட H-1B பதிவுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 38.5 சதவீதம் குறைந்துள்ளது. 2026 நிதியாண்டில் இது 343,981 ஆக இருந்தது. 2027 நிதியாண்டில் இது 211,600 ஆகக் குறைந்துள்ளது.

More Stories
‘போரை நிறுத்தம் செய்ய இஸ்ரேல் – ஈரான் விருப்பம்..’ ஆனால் டிரம்ப் சொன்னது என்ன?
லெபனான் மீதான தாக்குதலை கண்டித்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – பதிலடியில் ஈரான் பெட்ரோ ரசாயன ஆலை சேதம்
எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி – ட்ரம்ப்புக்கு பின்னடைவு