
இங்கிலாந்து நேற்று டி20 உலகக்கோப்பையில் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்களில் வெற்றி பெற்று கிரேட் எஸ்கேப் ஆனது. இதில் இங்கிலாந்துக்கே ஆச்சரியமும் திகைப்பும் ஊட்டிய அம்சம் என்னவெனில் இங்கிலாந்தின் இரண்டு டி20 ஸ்பெஷலிஸ்ட்களில் ஒருவர் அதிவேக பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர், இன்னொருவர் நல்ல சிக்கன விகிதத்துடன் விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டிகளை வெல்லக்கூடிய லெக் ஸ்பின்னர் ஆதில் ரஷீத், இருவரையும் மிகப் பிரமாதமாக நேபாள் அணியினர் கையாண்டனர்.
அதுவும் இங்கிலாந்தின் 184 ரன்களை விரட்டும் போது நேபாள் உண்மையில் இங்கிலாந்தின் இருதய ஓட்டத்தை நிறுத்திவிடும் வரலாற்றுத் தோல்வியை பரிசாக அளிக்கும் என்று வான்கடே மைதானத்தின் 17,000+ ரசிகர்களும் நேபாளுக்கு முழு ஆதரவு அளித்து ஊக்கமளித்தனர். அதுவும் குறிப்பாக நேபாள் வீரர் தீபேந்த்ரா சிங் ஆதில் ரஷீத் பந்து ஒன்றை சுவிட்ச் ஹிட் பாணியில் சிக்சருக்குத் தூக்க மும்பை ரசிகர்களுக்கு நிலைகொள்ளவில்லை.
அதாவது வரலாறு படைக்கப் போகும் நேபாள் அணியின் சாட்சியாக நாம் இருக்கப் போகிறோம் என்ற உற்சாகத்துடன் ரசிகர்கள் நேபாளின் ஒவ்வொரு ரன்னையும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அந்த ஆதில் ரஷீத் ஓவரில் 23 ரன்கள் விளாசப்பட நேபாள் 123/2 என்று கடைசி 6 ஓவர்களில் 62 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது.
அப்போது டிரிங்க்ஸ் இடைவேளையில் வாக்கி டாக்கியில் கோச் பிரெண்டன் மெக்கல்லத்திடம் பேசினார். உடனேயே சாம் கரனைக் கொண்டு வந்தார் புரூக் அவர் அய்ரீ விக்கெட்டைச் சாய்த்ததோடு இங்கிலாந்தை அச்சுறுத்திய 82 ரன்கள் கூட்டணியை முறியடித்தது. அய்ரி 29 பந்துகளில் 6 நான்குகள் ஒரு சிக்சருடன் 44 ரன்களில் 3வது விக்கெட்டாக வெளியேறினார்.
Read More
லியாம் டாசன் நேபாள் கேப்டன் ரோஹித் பாடெலை தூக்கி அடிக்க வைத்து மிட் விக்கெட்டில் கேட்ச் ஆகச் செய்து இங்கிலாந்தை மீண்டும் நம்பிக்கையின் பாதைக்குத் திருப்பினார். 15 மற்றும் 16வது ஓவர்களை முறையே சாம் கரண் மற்றும் டாசன் வீச 6 ரன்களே வந்தது. 4 ஓவர்கள் இருக்கும் போது 129/4 என்று 56 ரன்கள் தேவைப்பட்டது நேபாளுக்கு.
அப்போது லோகேஷ் பாம் சாம் கரணை இரண்டு அதிர்ஷ்டகரமான பவுண்டரிகளை அடித்த போது நேபாள் மீண்டும் அச்சுறுத்தும் மட்டத்துக்கு உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் 18வது ஓவரை வீச அவர் செய்த பெரிய தவறு கட்டர்ஸ்களை வீசுகிறேன் என்று ஸ்லோயர் ஒன்களாக வீசினார், இதில் 3 சிக்சர்களை வாரி வழங்கினார்.
ஆரிஃப் ஷேக் ஒரு சிக்ஸ் அடித்து ஆர்ச்சரிடம் ஆட்டமிழந்தாலும் குல்ஷன் ஜா இறங்கி ஒரு ரன்னைத் தட்டி விட்டு எடுக்க பாம் மீண்டும் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். மீண்டும் 2 சிக்சர்களை பாம் அடிக்க அந்த ஓவரில் 22 ரன்கள். இங்கிலாந்து அதிர்ச்சியடைந்தது, காரணம் 2 ஓவர்களில் 24 ரன்களே தேவை என்ற நிலைக்கு நேபாள் முன்னேறியதே.
அடுத்த ஓவரை லூக் உட் வீச பாம் ஸ்லாஷில் ஒரு எட்ஜ் பவுண்டரி விளாசினார், ஆனால் மோசம் அது அல்ல, அடுத்த 2 பந்துகளை வைட் ஆக வீசினார் லுக் உட். 2 ரன்கள் கூடுதலாகக் கிடைத்தது, பிறகு ஒரு அரிய டாட் பால், அடுத்த பந்தை பாம் நேராக பவுண்டரிக்கு விளாசினார். பிறகு உட் ஓவரின் 3வது வைடை வீசினார். இதனையடுத்து 9 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்றாயிற்று. அதன் பிறகு பாம் அடித்த நேர் ஷாட்டை வில் ஜாக்ஸ் அருமையாகத் தடுக்க 2 ரன்கள் வந்தது. அடுத்த பந்தில் சிங்கிள் எடுக்க நேபாளுக்கு 7 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
இப்போது சாம் கரன் கடைசி ஓவரில் 10 ரன்களை வெற்றிகரமாகத் தடுக்க வேண்டும். 2 தாழ்வான ஃபுல்டாஸ்கள் ரூம் கொடுக்காமல் வீசப்பட்டதால் பேட்டருக்கு ஸ்ட்ரோக் ஆட முடியவில்லை. சிங்கிள்கள்தான் வந்தது. கடைசி 3 பந்துகளில் 8 ரன்கள் தேவை. மீண்டும் ஒரு ஃபுல் பந்தை பாம் 2 ரன்களுக்குத் தட்டி விட்டார்.
நேபாள் ரசிகர்களும் மும்பை ரசிகர்களும் நேபாளுக்காக வேண்டத் தொடங்கினர். ஆனால் சாம் கரன் துல்லிய யார்க்கரை வீச பாம் அதில் சிங்கிள் எடுத்து கடைசி பந்தை பவுண்டரி அடிக்க சக வீரருக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம் ஆனால் பாம் சிங்கிளைத் தவிர்த்தார், தானே ஸ்ட்ரைக்கை வைத்துக் கொண்டார். கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை. ஆனால் மீண்டும் ஒரு துல்லிய யார்க்கரை டீப் கவருக்குத்தான் அடிக்க முடிந்தது. ஒரு ரன் தான் கிடைத்தது, தோல்வியைத் தாங்க முடியாமல் பாம் உட்கார்ந்து விட்டார்.
சாம் கரணின் கடைசி ஓவரும் பேட்டிங்கில் வில் ஜாக்ஸ் கடைசி ஓவரில் எடுத்த 21 ரன்களும் இல்லையெனில் இங்கிலாந்து அம்பேல். இதில் ஆதில் ரஷீத் 3 ஓவர்களில் 42 ரன்கள் விளாசப்பட்டதும் ஆர்ச்சர் 4 ஓவர்களில் 42 ரன்கள் விளாசப்பட்டதும் இங்கிலாந்துக்கு எதிராக மோதும் மற்ற அணிகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் அம்சமாகத் திகழ்ந்தது. ஆட்ட நாயகனாக வில் ஜாக்ஸ்

More Stories
கால் டாக்ஸி டிரைவர் டூ இத்தாலி கிரிக்கெட் அணி: அசத்தும் இந்திய வம்சாவளி வீரர் ஜஸ்பிரீத்
வலிமையான அணி! அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு டிரம்ப் பாராட்டு!
டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகள்!