February 15, 2026

அமெரிக்காவின் கேஎல்ஏ நிறுவனம் ரூ.3,510 கோடி முதலீடு: சென்னையில் ஆய்வு மையம் அமைக்க ஒப்பந்தம்

அமெரிக்காவின் கேஎல்ஏ நிறுவனம் ரூ.3,510 கோடி முதலீடு: சென்னையில் ஆய்வு மையம் அமைக்க ஒப்பந்தம்

சென்னை: அமெரிக்காவின் கேஎல்ஏ கார்ப்​பரேசன் நிறு​வனம் ரூ.3,510 கோடி முதலீட்டு பொறுப்​புறு​தி​யுடன் சென்​னை​யில் ஆராய்ச்சி மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க மையம் அமைக்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அமெரிக்காவைத் தலை​மை​யிட​மாகக் கொண்ட கேஎல்ஏ கார்ப்​பரேஷன், செமிகண்​டக்​டர் துறைக்​கான தொழில்​நுட்​பத் தீர்​வு​களை வழங்​கும் உலகளா​விய முன்​னணி நிறு​வனம் ஆகும். இந்​நிறு​வனம், சிப் உற்​பத்​தி​யில் பயன்​படும் ஆய்​வு, அளவீடு மற்​றும் தரவு பகுப்​பாய்வு அமைப்​பு​களை உரு​வாக்​கு​கிறது.

இதன் தொழில்​நுட்​பங்​கள், செமிகண்​டக்​டர் தயாரிப்​பு​களின் தரம், செயல்​திறன் மற்​றும் உற்​பத்தி திறனை மேம்​படுத்த உதவு​கின்​றன. உலகம் முழு​வதும் உள்ள முன்​னணி சிப் உற்​பத்​தி​யாளர்​களுக்கு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு சேவை​களை வழங்​கி, புதிய தலை​முறை செமிகண்​டக்​டர் வளர்ச்​சி​யில் இந்​நிறு​வனம் முக்​கிய பங்கு வகிக்​கிறது.

அந்​த வகை​யில், கேஎல்ஏ கார்ப்​ப ரேசனின் துணை நிறு​வன​மான கேஎல்ஏ இந்​தியா நிறு​வனம் ரூ.3,510 கோடி முதலீட்டு பொறுப்​புறு​தி​யுடன் சென்​னை​யில், ஆராய்ச்சி மேம்​பாடு மற்றும் புத்​தாக்க வளாகத்தை அமைக்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் நேற்று புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

சென்​னை​யில், 12 ஏக்​கர் நிலப்​பரப்​பளவி​லான இந்த வளாகத்​தில், உயர் செயல்​திறன், கணினி தொழில்​நுட்​பம், செயல்​முறை கட்​டுப்​பாடு, பொறி​யியல் மென்​பொருள் போன்ற துறை​களில், மேம்​பட்ட ஆராய்ச்சி மற்​றும் புத்​தாக்க பணி​களை இந்​நிறு​வனம் மேற்​கொள்ள உள்​ளது.

இதன்​மூலம், அடுத்த 10 ஆண்​டு​களில், 4 ஆயிரம் உயர்தர வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. நிகழ்​வில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்டி.ஆர்​.பி.​ராஜா, தலை​மைச்​ செயலர் நா.​முரு​கானந்​தம், தொழில்​துறை செயலர் வி.அருண்​ராய், வழி​காட்டி நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் தாரேஸ் அகமது மற்​றும் கேஎல்ஏ நிறு​வனத்​தின் அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

Spread the love