ஆண்டிபட்டி, மார்ச் 16,
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில், தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காதது மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார். திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகத்தை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்தும், சாமானிய மக்களைப் பாதிக்கும் சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஆவேசமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திமுக பேரூர் செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செஞ்சூரி செல்வம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரகாஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்புராஜ், ரவி, தே.மு.தி.க .பேரூர் செயலாளர் பாலாஜி, மற்றும் பாலமுருகன், சதீஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வெங்கடேசன், ராமர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரன், பிச்சைமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த குழந்தைராஜ், தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்த மாரி, ஆதிதமிழர் பேரவை மல்லையாசாமி, ஆதித் தமிழர் கட்சி தங்கபாண்டி, மக்கள் விடுதலை கட்சி பாண்டி உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

More Stories
விளாத்திகுளம் மாணவி வழக்கில் 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 41 லட்சம் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்த நிலையில், பழனியில் வாகன சோதனையை தொடங்கிய காவல்துறையினர்