இந்த நியோ டைடல் பூங்காக்கள் அமைப்பதன்மூலம் 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, ஈரோடு மாவட்டம் கங்காபுரம் கிராமத்தில் ரூ.39.87 கோடியில் நியோடைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் ரூ.39.06 கோடியிலும்,விருதுநகர் கூரைக்குண்டு கிராமத்தில் ரூ.38.72 கோடியிலும் மினி டைடல் பூங்காக்கள்அமைக்கப்படுகின்றன.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலி, விருதுநகா்,ஈரோடு ஆகிய இடங்களில் ரூ.117.65 கோடியில் டைடல் நியோ பூங்காக்களைஅமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இன்று (வியாழக்கிழமை பிப். 26)அடிக்கல் நாட்டினார்..
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் திருநெல்வேலி
மாவட்டம் ரெட்டியாா்பட்டியில் ரூ.39.06 கோடியிலும், விருதுநகா் மாவட்டம்
கூரைக்குண்டு கிராமத்தில் ரூ.38.72 கோடியிலும், ஈரோடு மாவட்டம் கங்காபுரத்தில்
ரூ.39.87 கோடியிலும் மூன்று டைடல் நியோ பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.
இந்தப் பூங்காக்கள் ஒவ்வொன்றும் சுமாா் தலா 600 தகவல் தொழில்நுட்ப
வல்லுநா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில்
கட்டப்படவுள்ளன.
ஒவ்வொன்றும் சுமாா் 60,000 சதுர அடி பரப்பில் தரை மற்றும் மூன்று தளங்கள்
கொண்டு ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ, ஸ்டாா்ட்- அப் நிறுவனங்கள் இடம்பெறும் வகையில்
கட்டப்படவுள்ளன.
டைடல் நியோ லிமிடெட் எனும் சிறப்பு நோக்க நிறுவனம் மூலம் இரண்டாம் நிலை
மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50,000 சதுர அடி முதல் ஒரு லட்சம் சதுர அடி
கட்டுமானப் பரப்புடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு அரசு
பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம்,
தஞ்சாவூா், சேலம், தூத்துக்குடி, திருப்பூா், வேலூா், காரைக்குடி ஆகிய இடங்களில் மினி
டைடல் பூங்காக்கள் ஏற்கெனவே திறக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு
வருகின்றன. மேலும், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மினி
டைடல் பூங்காக்கள் அமைக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன
. நாகா்கோவிலில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல்வா் ஸ்டாலின்பிப்ரவரி
25ந்தேதி அடிக்கல் நாட்டினாா். நாகை, கரூா், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மினி
டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, விரைவில்
அவற்றின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளன எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு.
‘நல்லகண்ணு… பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர்!’ – தலைவர்கள் புகழஞ்சலி
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே ஆய்வு