பராசக்தி படத்தின் புதிய சாதனை குறித்து…

பராசக்தி போஸ்டர்.படம்: X
சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் குறைந்த நேரத்தில் 1 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளது.
சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.

ஹிந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த பராசக்தி திரைப்படம், கடந்த பிப். 7 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த நிலையில், பராசக்தி படம் ஓடிடியில் வெளியாகி குறைந்த நேரத்திலேயே 1 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜீ5 ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை பராசக்தி படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

More Stories
வித் லவ் படக்குழுவைப் பாராட்டிய ரஜினிகாந்த்!
ஜன நாயகன் வழக்கை திரும்பப் பெற உயர்நீதிமன்றம் அனுமதி!
ஜனநாயகன் படம் தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைப்பு